Sunday, 8 January 2012

பொங்கல் பண்டிகையும் என் பொங்கலும்


மூனு நாள் விடுமுறை ஞாயிறு அன்னைக்கு வந்துட்டாக்கூட குறைந்த பட்சம் ரெண்டு நாள்,அப்புறம் டீவில சிறப்பு நிகழ்ச்சி,தியேட்டர்ல ரிலீசுக்கு தயாரா இருக்குற தமிழ்சினிமா மற்றும் நண்பர்களுடன் ஊர்சுற்றல் பொங்கல்னா இவ்வளவுதான் ஞாபகம் வரும் நமக்கு.கிராமத்துல பொங்கல் கொண்டாடுறத யாரும் பார்த்திருக்க மாட்டோம்.
          சம்மர் லீவுக்கு மட்டுமே சொந்த ஊருக்கு போற வழக்கம்ன்றதால கிராமத்துல பொங்கல் கொண்டாடி நானும் பார்த்ததில்ல ஆனா எங்கப்பாரு பரம்பரையில அவர்தான் நகரத்துக்கு குடிபெயர்ந்த முதல் தலைமுறை கிராமத்துல அவங்க அந்த மக்களோட நேரடி அனுபவம் இருந்ததால இன்னமும் எங்க வீட்ல பொங்கல் அந்த மண்ணின் மரபுப்படியே கொண்டாடுவது வழக்கம்.சாணிப் பிள்ளையார்,மண் அடுப்பு,பாணை,சட்டினு தை திருநாள் அன்னைக்கு வீட்ல மண்வாசனை வீசும்.

       ஆனா இதுல நம்ம பங்குனு எதுவும் கிடையாது. பானை, சட்டி மற்றும் படையலுக்கு தேவையான பொருட்கள் எல்லாம் பார்த்து வாங்குறதும் அவங்கதான்,காலைல முன்வாசல்ல சாணி தெளிச்சி கோலம்போட்டு வாசலோட நாலு மூலையிலையும் வாங்குன கரும்புக் கட்டை கட்டி , மாட்டு சாணத்த எடுத்து பிள்ளையார் மாதிரி பிடிச்சி வச்சி அருகம்புல்,பால் சூடம் ஏத்தி படைச்சிட்டு அடுப்பு மூட்டி  பொங்கல் வைக்க ஆரம்ப்ச்சிருவாங்க.

               இதெல்லாம் நடந்து முடியற வர  டீவில புதுசா வந்த சினிமா பாட்டை கேட்டுகிட்டு ,இல்ல பாதி துணிய கிழிச்சி போட்டுக்கிட்டு எவளாவது " பொங்கொல் நல்வால்துகள்"னு சொல்றத கேட்டுக்கிட்டு இருப்போம்.பொங்கல் பொங்கி வரும்போது மட்டும் கோரசா  "பொங்கலோ பொங்கல்,பொங்கலோ பொங்கல்"னு கத்துவொம்.அதோட சரி நம்ம வேலை மறுபடியும் டீவி முன்னாடி குந்திக்கிடுவோம்.மதியத்துக்கு வடை,பாயாசத்தோட சாப்பாடு.இதெல்லாம் சின்ன வயசுல நல்லாத்தான் இருந்தது.

                       என்னதான் சம்பிரதாயப்படி பொங்கல் கொண்டாடினாலும் அதுல ஏதோ ஒன்னு குறையுற மாதிரியே தோணும்,நமக்கு எதுக்கு பொங்கல் பண்டிகை,விவசாயிகளுக்குத்தான இந்த தை மாசம் அறுவடை நாள் அவங்களுக்குதான் இது திருநாள் நாம ஏன் பொங்கல் வைக்கனும்,தீபாவளி நமக்கில்லைனா இதுவும் நமக்கில்லைதான். ஹம்ம்..இந்த மாதிரிலாம் பகுத்தறிவு நம்மள யோசிக்க வைக்குது,நமக்கு வயிறு நிறைவா இருக்கு இந்த மாதிரிலாம் மூளை வேலை செய்யுது. ஆனா நாள் பூரா கம்ப்யூட்டர் முன்னாடி உட்க்கார்ந்து பிசாவும் பர்கரும் சாப்பிட்டு குண்டி பெருத்து கொழுப்பு ஏறி ஹார்ர்ட் அட்டாக் வந்து நாப்பது வயசுல சாவறது பத்தியெல்லாம் நம்ம மூளை யோசிக்காது.

                         அப்டியே ஒரு வேலை இந்த நகரத்துல பொங்கல ஒரு பாரம்பர்ய சடங்கா அடுத்த சந்ததியினருக்கு கொண்டு போனா ,"பொங்கல் ஹாலிடேஸ் ஃப்ரென்ஸ்லாம் வருவாங்க,மானத்த வாங்குறாரு ,சுத்த கன்ட்ரி ப்ரூட்றா இந்த டாடி,இவர எப்டி என் ஃப்ரென்ட்ஸ்கிட்ட அறிமுக படுத்தறது"னு நினைப்பான் என் மகன் நான் முன்னெலாம் நினைப்பது போல.

             சின்ன வயசுல ஒருநாள் விடுமுறைக்காகவும்,விட்ல செய்யும் பலகாரங்களுக்காகவும் பண்டிகையை விரும்பியிருப்போம்,அதுக்கப்புறம் அது அலுத்துபோக சந்தோசத்துக்காக வேற எதையோ தேடுறோம்.செல்போன்ல கடலை வறுக்குறோம்,பார்டிக்கு போறோம்,ஜொல் விடுறோம்,கிரிக்கெட்,சினிமா பாக்குறோம்,வலைதளத்துல நாலு வார்த்தைய கோர்த்து எழுதி புரட்சி செய்றோம்.

           நகர வாழ்க்கை நமக்கு பலவிதங்கள்ல வசதியா தெரிஞ்சாலும் மன அமைதிக்காக மலை,காடுனு சுற்றுலா போறோம்,நம்மள அறியாம அந்த இயற்கைய விரும்பறோம், கிராமத்துக்கு போய் நெல்வயல்ல நின்னும்,ஆத்துல பேன்ட தூக்கி காலை மட்டும் தண்ணியில விட்டும்,மரத்துல ஊஞ்சல் கட்டி ஆடுற மாதிரியும், ஃபோட்டா எடுத்து ஃபேஸ்புக்ல போட்டு லைக் வாங்குறது ஆச்சர்யமா ஒரு தனித்திறமையாவும் பேசுறோம், நம்ம மூதாதையர் இயல்பா செஞ்சதையெல்லாம் இப்ப மெனக்கெட்டு அதுக்குனு ஒரு நாள் ஒதுக்கி லைட்டா அனுபவிக்கிறோம்.

            இது மாதிரி மொக்கைய இன்னம் போட்டுக்கிடே போகலாம், சொல்ல வந்தது என்னன்னா பொங்கல் பண்டிகைய உண்மையிலே அனுபவிச்சு கொண்டாடனும்னா கிராமத்துலதான் அது நடக்கும் ,உங்களோட தாத்தா இன்னம் அங்கதான் இருப்பாங்க,விவசாயம் செஞ்சிக்கிட்டு, ஊரே கூடி வாசல்ல இல்ல அம்மன் கோயில்ல பொங்கல் வைக்கறதும்,பொங்கலையொட்டி ஊர்பொதுவுல நடத்துற கலை நிகழ்ச்சி,விளையாட்டு போட்டி,அப்றம் காலை சண்டை இதெல்லாமே அந்தந்த மண்ணுக்கே உரிய சிறப்பு.அவங்களோட சேர்ந்து பொங்கல் கொண்டாடினா அதுல ஒரு அர்த்தம் இருக்கு,அவங்களோட சந்தோசத்தை பகிர்ந்துகிட்ட மாதிரியும் இருக்கும். சும்மா தமிழர் திருவிழானு மட்டும் சொல்லி இதெல்லாம் நாலு சுவற்றுக்குள்ள கொண்டாட முடியாது.