Monday, 10 December 2012

வாலி வதைப் படலம்


காலேஜ் படிக்கறப்ப நண்பர்கள் சில பேர தெரியும் எப்டின்னா அவங்க வாழ்க்கையில ஒவ்வொரு விசயத்தையும் பெரிய திட்டம் போட்டுத்தான் செய்வாங்க, எதிர்காலம் பற்றிய பெரிய கனவுகளோடு இறுதியில் சென்று அடைகிற இடத்தை அதற்க்கான முழு திட்டமும் அவங்க கையில் இருக்கும், பாதையை விட்டு கொஞ்சம் விலகினாலும் பெரிய ஆபத்துனு எதோ உள்ளுணர்வாக இருக்குமோ என்னவோ ரொம்பவும் கவனமாக கடினமா தங்களோட வாழ்க்கையை அமைத்து நடப்பாங்க. படிச்சி டிகிரி வாங்கி வேலைக்கு போறது வேற விசயம் ஆனா காலேஜ் வாழ்க்கையை கடைசி வரை மறக்க முடியாமல் ஆக்குவது கண்டிப்பா அந்த டிகிரியா இருக்காது. நானெல்லாம் அந்த நாலு வருசத்த கடைசி வரைக்கும் மறக்கவே கூடாதுனே சில பல திரில்லரான வேலைகள் செய்திருக்கேன். ஆனாலும் எனக்கே பலதை தவற விட்டு விட்டோம் என்ற எணணம் இன்றுவரை உண்டு. அதற்கு காரணம் எனக்கும் எதிர்காலம் பற்றிய பயம் உண்டு,தெரிந்தோ தெரியாமலோ நானும் என் வாழ்க்கையின் சில கணங்களை கடினமாக்கிக் கொண்டேன் என்றுதான் தோன்றியது ராஜனை பார்க்கும்போது.

ராஜன் எங்கள் அலுவலகத்தில் எனக்கு பின்பு சேர்ந்தவர்தான்.தந்தை இறந்து அவருடைய வேலை இவருக்கு கிடைத்தது. திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள். ஆனால் நான் அதுவரை பார்த்திராத குடும்பத் தலைவர் என்றுதான் சொல்லவேண்டும்.மனிதருக்கு இல்லாத  பழக்கமே கிடையாது, சிகிரெட்,தண்ணி,பொன்னுங்கனு ஒரு சுகபோகினு சொல்லலாம். லோக்கலில்  பல பெரிய ஆட்கள், அடிதடி ஆட்களின் சகவாசம் வேற உண்டு. நான் வேலை  செய்யும் அலுவலக்த்தில் அனைவருமே 'குடி'மக்கள்தான் என்றாலும் அவர்களுக்கு குடும்ப பொறுப்பு இருப்பதை சில சமயங்களில் பார்க்க முடியும். இவருக்கு மனைவியோ குழந்தைகளோ இருப்பது அவர் பேச்சில்கூட தெரிந்து கொள்ள முடியாது. சம்பள சிலிப்  மூன்று அல்லது இரண்டு இலக்கம் தான்.  போடாத லோன் இல்லை.பிடித்தம் போக வீட்டுக்கு என்ன  போகுமோ தெரியல.அவருடைய அம்மாவுக்கு பென்ஷன் வரும் அதில்தான் குடும்பம் ஓடும்போல.அவர் எங்கள் அலுவலகத்திற்க்கு வந்து சேர்ந்த்தே ஏற்கனவே வேலை செய்த இடத்தில் பணத்தை கையாடல் செய்து கிடைத்த தண்டனை யால்தான்.

சக ஊழியருக்கெல்லாம் ஒரு பயம் இங்க என்ன செய்ய போறானோன்னு. ஆனா வந்த கொஞ்ச நாள்லயே எல்லார்கிட்டேயும் சிரிச்சி பேசி ரொம்ப ஜாலியான பேர்வழினு பேர் வாங்கிட்டாரு.இங்க ஏறகனவே எல்லாரும் தண்ணி கேசு இவரும் வந்து சேர்ந்துட்டதனால கேட்கவா வேணும்.வேலை முடிஞ்சதும் குரூப்பாவே தண்ணி அடிக்கிறதுனு எல்லாரும் ரொம்ப நெருக்கமாகிட்டாங்க.ஆனா செலவு எப்பவுமே இவருதான். அவங்க பையிலிருந்து காசே வெளிய வராது.எனக்கும் அவரோட நல்ல சினேகம் இருந்தது.

வந்த கொஞ்ச நாள்லயே மேலதிகாரிக்கும் அவருக்கும் மோதல், வேலையும் சரியா செய்யறதில்லை,பேச்சு எப்பவுமே உயர் டெசி பெல்லதான் இருக்கும்.

"த்தா நீ யார்றா என்ன வேல செய்ய சொல்றது,ஒரு போன் போட்டனா வீடு போயி சேர மாட்ட"

"ஐ வில் டேக் சிவியர் ஆக்சன் ராஜன்"-அதிகாரி.

"போடா தெரியும்  எல்லாத்தையும் பாத்துட்டுதான் வந்திருக்கோம்"

"ஐ வில் இஷ்யு மெமொ"

"குடு குடு கிழிச்சி மூஞ்சில போடுறேன்"

இந்த மாதிரி எதிக்ஸ்லாம் இங்க வழக்கமானதுதான்.இது பரவால்ல  இதுக்கு  முன்னாடி மேலதிகாரிய ஊழியர் ஒருத்தர அறுவாளால வெட்ட வந்ததுலாம் வேற விசயம்.ராஜன் எளிதில் கோபம் அடையக்கூடியவர்தான்,ஆனாலும் வெளிப்படையாக பேசுபவர்,வெளியிலும் நண்பர்கள் வட்டம் கொஞ்சம் பெரிது.மாலை நான்கு மணி ஆனதுமே மொபைல் அலற ஆரம்பித்துவிடும், பார்ட்டி முடித்துவிட்டு வீடு போக பத்து ஆகும்போல.

வாழ்க்கையில் பெரிதாக தெரிகிற சில விசயங்கள் நாம் தேடிப்போனாலும் கிடைப்பதில்லை,ஒருவேலை அதை பெரிதாக நினைக்காவிட்டால் அது அன்றாட நிகழ்வாக நடந்துவிட்டுப்போகுமோ என்னவோ மூத்திரம் பெய்வதுபோல.ராஜனுக்கு எல்லா விசயமும் அதுபோலத்தான்.

எனக்கு அவரை பார்க்க சில சமயம் பொறாமையாகக் கூட இருக்கும்,எந்த கவலையுமே இல்லாம மனுசன் இருக்கமுடியுமா அதுக்கு ராஜன் மாதிரி இருந்தாதான் முடியுமானு?ராஜனை போன்றவர்களை நிகழ்காலத்தில் வசிப்பவர்கள் என்றுதான் சொல்வேன்.கடந்த கால ஏக்கமும் இல்லை எதிர்காலத்தை பற்றிய சிந்தனையும் இல்லை.எந்தவித சிந்தனைகளுமின்றி வாழ்க்கையை அனுபவிக்க தெரிவதும் ஒரு வரம்தான்.

என்ன மேட்டருன்னா எங்க அலுவலகத்துல ஒரு பொண்ணும் வேலை செய்யுது,சின்ன வயசிலே விதவை ஆனவங்க,அவங்க கணவரும் அங்கயே வேலை செயதவர்தான்.ஆனா தெரிந்த பெண்ன்றதனால மற்ற எல்லா  ஊழியர்களும்  அதுகிட்ட கண்ணியம்மா நடந்துப்பாங்க.அதுக்கும் ஆபிஸ் வந்துட்டு போறத தவற வேற வேலை எதுவும் செய்யத் தெரியாது. சொன்னாலும் திருதிருனு முழிக்கும்.இதுக்கிட்ட என்னத்த சொல்லினு இருக்கும்,பார்த்தாலும் பாவமா இருக்கும்.நமக்கு சில சமயம் வேலை கடுமையா இருக்கும்போது இது சும்மா தேமேனு உட்கார்ந்திருக்கும் அப்டியே  எரிஞ்சி வரும் ஆனாலும் சொல்லத் தோணாது.

 ராஜன் கிளார்க்காதான் வந்தாரு,இந்த பொன்னும் சும்மாதான் இருக்கேன்னு அவருக்கு துணையா எடுபுடி வேலை செய்யட்டுமேனு அதே ரூம்ல விட்டாச்சு. கொஞ்ச நாள் நல்லாத்தான் போயிட்டிருந்தது.நாளாக அந்த பொன்னு கிட்டேயும் சில மாற்றம் தெரிஞ்சது.மேக்கப் பொட்டுகிட்டு,கலர் கலரா புடவ கட்டிகிட்டுனு, அவருடைய ரூம்லயும் பேச்சு சத்தம் சிரிப்பு சத்தம்னு அதிகரிக்க ஆரம்பித்தது.ஜாலியா எதாவது பேசுவார்னு சும்மா இருந்துட்டோம்.

எங்ககிட்ட ஒருத்தர் இருக்கார் இந்த மாதிரி விசயங்கள ஆராய்ந்து மோப்பம் பிடிக்கறதுக்குனு,வேலை செய்வாரோ இல்லையோ போட்டு கொடுக்கிறது, பத்த வைக்கறதுதான் இவர் வேலை. ஆரம்பத்திலே  புலம்பல்,விசயம் வேற மாதிரி போயிடிச்சுனு.முதல்ல யாரும் நம்பல,அவரு சும்மா இருப்பாரா? யாரும் நம்பலைனு தெரிஞ்சதும் ஆதாரம் திரட்ட ஆரம்பிசிட்டாரு. ஒருநாள் அந்த பொன்னோட மொபைல் நம்பர கொடுத்து  அவுட்கோயிங்க் நம்பர் லிஸ்ட் கேட்டாரு நானும் ஒரு ஆர்வத்துல தட்டி பார்க்கும்போதுதான் தெரிஞ்சது. கடலை ஆபிஸ்ல முடிஞ்சி வீட்லையும் தொடர்ற விசயம்,ஆஹா மேட்டர் முத்திடிச்சு போல.தெரியாத்தனமா அந்த லிஸ்ட பிரின்ட் வேற போட்டு கொடுத்துட்டேன்.அவரு அதை கையில வச்ச்சிக்கிட்டு ஆபீஸ் பூரா ஆளுக் கொரு நகல் எடுத்து கொடுத்துட்டாரு. விசயம் அப்பத்தான் விவகாரம் ஆக ஆரம்ப்பிச்சுது.பொன்னு வேற தெரிஞ்ச பொன்னு, விடுவாங்களா?

 அடுத்த சில நாட்கள் அலுவலகமே அல்லோல கல்லோல பட்டது.விசயம் தெரிஞ்சு அந்த பொன்ன கூப்பிட்டு வச்சி கேட்டு அதுவும் இல்லைனு மறுத்து, நா  சும்மா  வேலை  சம்மந்தமா  சந்தேகம்  கேட்டேன்னு  அது சொல்ல, எல்லாருக்கும் தூக்கிவாரிப்  போட்டது.எனக்கு சிரிப்ப அடக்க முடியல.நேரடி ஆதாரம் இல்லாததால் கொஞ்ச நாள் அமுங்கிருந்தது விசயம்,என்னடா செய்யலாம்னு எல்லாரும் கையை பிசைந்து கொன்டிருக்கும்போது ஒரு நாள் ஆபிஸ் செக்யூரிட்டி அவங்க ரெண்டு பேரையும் ஏடாகூடமான நிலையில  அவங்க அறையில்  பார்க்க இப்ப ஆதாரத்தோட மாட்டிக்கிட்டாங்க.விசயம் மேலதிகாரி வரைக்கும் போனது. இதுக்கிடையில எங்க ஆபிஸ்ல இருந்த வங்க நடத்துன கூத்து இருக்கே,அவரோட குரூப்பா சேர்ந்து சரக்கடிச்ச வங்கெல்லாம் இப்போ எதிரியாகிட்டாங்க,

"அடிங்கொ தெரிஞ்ச பொன்னுனு கை வைக்காம இருந்தா இவன் வேலைய காட்டிடானா "

"ஆபிச பெனாயில் ஊத்தி கழுவங்கயா"னு அடிக்க போயிட்டார் ஒருத்தர்.

அதுவரைக்கும் வெறும் ஊழியராக இருந்தவங்கெல்லாம் கலாச்சார காவலராகி கையில கட்டைய எடுத்துட்டாங்க.ஒருவாரம் ஆபிசே குத்துவேன் கொல்லுவேன்னு ரணகள பூமியா இருந்தது.அவருக்கும் பின்புலம் கொஞ்சம் நிறைய இருக்கும் போல அந்த தைரியத்தில் 'பாத்துர்றேன், தூக்கிட்றேன்'னு எதிர்கூச்சல்.ஆனா அடிதடி நடந்த பாடில்ல.எல்லாருக்கும் வேலைய பற்றிய பயம் இருந்தது யாரு முதல்ல கைய வைக்கறதுனுதான் கொஞ்சம் தயக்கம்.ரத்தம் வராம சாட்சியில்லாம அடிச்சா கம்பெனி நடத்தை விதிகள் பாயாது.

ஒரு சமயத்தில் தொடர்பு  இருக்குனு ரெண்டு பேரும் ஒத்துக்கிட்டதுக்கு அப்புறமும் பிரச்சணை முடிஞ்சபாடில்லை.விசயம் அவங்க வீட்டுவரைக்கும் போக அந்த பொன்னோட  பெரிய பையனுக்கு பதிமூன்று வயது ,அவன் வீட்டு பக்கமே வர்றதில்லை, இவரோட  வீட்ல அவர் அம்மா மனைவி விசம் குடிச்சிடுவேன்னு மிரட்ட, இவரு அம்மாவையும்  மனைவியையும்  வீட்ட  விட்டு அடித்து துரத்த இவங்க காதல் இன்னும் முற்றியதே தவிர குறையல. எங்க ஆபிசுலயும் என்னென்னமோ செஞ்சி பார்த்தாங்க,ம்ம்ம் நடக்கல, அப்புறம் ஒரு நல்ல நாள்ல ஆள் செட் பண்ணி கை கால் முறிக்கற வரைக்கும் போன போது ரெண்டு பேரும் கோயிலில் கல்யாணம் செய்துகிட்டாங்க.

இப்போ ஊரறிய வைப்பாட்டி,  ஆபிஸ்லயும்  கொஞ்ச  நாள் மழை  விட்டும்  தூவானம் மாதிரி  அவ்வபோது  சில  வாய்ச்சண்டைகள், அவ்வளவு தான், பிசுபிசுத்தது. இப்போ கோபம் குறைந்து பொகைச்சல் ஆரம்பித்தது,

"மனுசன் வாழ்ந்தா இவன மாதிரி  வாழனும்டா,நாமளும்தான் வாழுறோம்"

"ஆமா தேவுடியா, புருசன் செத்து வயித்து பொழப்புக்கு வேல கொடுத்தா,ஒடம்பு பசிதான் முக்கியமா போயிட்டுது இவளுக்கு"

"இவதான் மயக்கிட்டா,நா கொஞ்ச நாள் சிரிச்சி பேசிருந்தா என்னையும் வளைச்சி போட்டிருப்பா "

ராஜனின் வீட்டில்அவர் மனைவியின் கூச்சல் மட்டும் அவ்வபோது எழுந்து அடங்கும்போல மற்றபடி பணத்திற்க்கு இப்போது பிரச்சணை இல்லையென்று கேள்வி, வீட்டில் பிரச்சணை வந்தாலாவது இதற்கு ஒரு முடிவு வரும் என்று எதிர்பார்த்தவர்கள் அப்படி ஆகாததால்,அவர் குடும்ப பிண்ணனியை சந்தியில் இழுத்தனர்.

"அவனோட அம்மாவே ஒரு தேவடியாங்க,அவ பொண்டாட்டி ஊர் மேயுறவ,மாமியாரும் தொழில் பண்றவ பின்ன தாயளிக்கு புத்தி எப்படி போவும்,அவன் குடும்பத்துக்கு இதுலாம் ஒரு விசயமே இல்ல"

இப்படி சிறிது நாள் பேச்சுகள் வந்து பின் அதுவும் ஓய்ந்து போனது.

இவ்விசயத்தில் பிரச்சணை எழுப்புவது ஊழியர்கள் மட்டும்தான் ஏற்கனவே பல ஆண்டு முன்விரோதம் மேலதிகாரிக்கும் அவர்களுக்கும் இருந்ததால் எதிர்பாராதவிதமாக மேலதிகாரி ராஜனுக்கு ஆதரவாக இருந்தார். ஊழியர்கள் கொடுத்த மனுவை அவர் பரிசீலக்கவே இல்லை

ஆரம்பத்திலிருந்தே இந்த விவகாரத்தில் நான் விலகியே இருந்தேன்,அவர் கூடவே சேர்ந்து சரக்கடிக்கவில்லையென்றாலும் அவரிடம் எனக்கு நல்ல பழக்கம் இருந்தது.விவகாரம் நடந்து கொண்டிருக்கும்போது ஒருமுறை அலுவலக ஊழியர்கள் அனைவரும் சேரந்து ராஜனை இடைநீக்கம் செய்ய மணு எழுதி அனைவரின் கையெழுத்தையும் வாங்கி என்னையும் கையெழுத்திட எவ்வளவு வற்புறுத்தியும் நான் முடியாதென்று மறுத்துவிட்டேன்.

ஒன்று அலுவலக நன்னடத்தை விதிகளின்படி இதுமாதிரி சம்பவங்கள் தண்டிக்கபட வேண்டியவைதான் ஆனால் பாதிக்கபட்டவர் முறையீடு செய்திருக்க வேண்டும்.அதற்க்கு இங்கு வழியில்லை. இல்லையென்றாலும் கூட அலுவலகத்தில் இருவரும் தகாத நடத்தையில் ஈடுபட்டதை ஒருவர் பார்த்திருக்கிறார்,இதை வைத்துக்கொண்டு அவரை நீக்கம் செய்யலாம். ஆனால் இங்கு இதெல்லாம் ஒரு விசயமே கிடையாது.எங்கள் கம்பெனி வரலாற்றை திரும்பி பார்த்தால் தெரியும். ஒரு கோடிவரை  ஊழல் செய்து  ஒரு இடையூறும் இல்லாமல் பணி ஓய்வு பெற்றவர்கள் உண்டு. இது ஒரு சார்பான காரணம் மட்டும்தான் நான் இந்த விசயத்தில் ஒன்றும் செய்வதற்கில்லை என்பதற்கு. உண்மை என்னவென்றால் என்னுடைய குழப்பமான மணநிலைதான்.ராஜன் ஏற்கனவே திருமணம் ஆனவர் அவர் செய்தது தவறுதான்,ஒரு பெண்ணுக்கு துரோகம் செய்துவிட்டார்.

உண்மையில் இருவரும் திருமணம் வரை செல்ல வாய்ப்பிருக்கவில்லை, ராஜன் அவ்வாறு மாட்டிக்கொள்பவரில்லை.எங்க ஊழியர் சொன்னதுபோல

"அந்த பொன்னுக்கு ஒடம்பு பசி,இவனுக்கு காசு வேணும் சரக்கடிக்க"

இந்த சம்பவத்தை அப்படியே விட்டிருந்தால் இருவரும் தானாகவே பிரிந்திருக்க வாய்ப்புண்டு,இருவருக்குமே வீட்டில் குழந்தைகள் உண்டு. உண்மையில் ஊழியர்கள்தான் இதை பெரிதாக்கி வெடிக்க வைத்துவிட்டார்கள்.

இப்போதெல்லாம் அலுவலகத்துக்கு ராஜனும் அந்த பெண்ணும்  ஜோடியாகத்தான் வருகை, சிரித்துப் பேசிக்கொண்டே,மற்றவர்கள் காதில் விழும்வரை. இவருக்கும் இப்போ இரண்டு சம்பளம், சரக்குக்கு குறைவில்லை. கை செலவில் பஜாஜ் டிஸ்கவர் ஒன்னு வாங்கியாகிவிட்டது,கலர் கலராக ட்ரெஸ், அவர் மனைவியும் வேற வழியில்லாமல் இவரிடம் வந்துவிட்டதாக தெரிந்தது. இப்போது இரண்டு குடும்பம்.மனுசன் ஒரு மாதத்தில் ஏக சதை போட்டு முகத்தில் பள பளப்பு கூடியிருந்தது. முன்னைவிட முகத்தில் எப்போதும் ஒரு எள்ளல் தொணி, சிரிப்பு.

"பார்த்தியா எப்டி வந்தோம்ல" என்று.

சரி முடிந்தது, இனிமேலாவது வாங்குற சம்பளத்திற்க்கு அலுவலகத்தில் வேலை நடக்குமென்று நினைக்கும்போது ஒரு நாளில் ராஜன் அவர் வீட்டு மின்விசிறியில் மனைவியின் புடவையால் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்தார்.   
              
சற்று வியப்பாகத்தான் இருந்தது.புற உலகத்திற்க்காகவே  தங்களுடைய  வாழ்க்கையை  கடினமாக்கி   கொள்பர்களின்  மத்தியில் ராஜன் சில நாட்களாவது தன்னுடைய விருப்பம்போல் வாழ்ந்திருக்கிறார் என்றுதான் நினைத்தேன்.ஆனால் அவர் கடுமையான மண உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்.

எந்த ஒரு மனிதனுக்கும் எவ்வளவு பெரிய பாவங்களிலிருந்தும் தன்னை விடிவித்துக் கொண்டு  ஒரு புதிய வாழ்க்கை வாழ உரிமையுண்டு.

ராஜன் தூக்கு மாட்டி தொங்கிய மறுகணமே குடும்பத்தினர் வந்து காப்பாற்றியுள்ளனர்.ஆனால் அவர் சில கணம் தாமதித்திருந்தால் நிலைமை விபரீதம்தான்.இப்போது முன்னைவிட தான் செய்வதில் நம்பிக்கையுடன் இருக்கிறார் .அந்த பெண்ணின் வீடு வரை சென்று குடும்பம் நடத்துகிறார். அந்தப் பெண்ணை வேறு ஊருக்கு பணி மாற்றம் மட்டுமே செய்ய முடிந்தது மற்றவர்களால்.

 

Monday, 27 August 2012

ஒரு சன்டேவும் சில குறிப்புகளும்

ஞாயிற்றுக்கிழமை எப்போது வரும் என்ற எதிர்நோக்கிய நாட்களெல்லாம் உண்டு,இப்போது இல்லை ,காலையில் விடுமுறை நாளென்பதால் பொறுமையோடு தின்ற ஐந்து தோசை,தோசை என்று சொல்ல முடியாது, வேண்டுமானால் அப்பம் என்று வைத்துக் கொள்ளலாம், ஆனால் இது அதிலும் சேர்த்தியில்லை என்றுதான் தோன்றுகிறது,இரண்டு அப்பத்தை சேர்த்து வைத்தார்போல் தடிமம்,நான்கு சென்டிமீட்டர் ஆரத்துடன்,சில சமயம் இரண்டு ஆட்களுக்கு சேர்த்து சுட நேரும்போது ஆரம் ஆறு சென்டு மீட்டர் வரை நீளும்,சாப்பிட்டு உட்க்கார்ந்தால் எழுந்திருக்க தோணாது,வயிறு மந்தமாகி, சீரணமாகாமல்,வேலை நாட்களானால் அலுவகத்தில் குனிந்து நிமிரும்போது செரிமானமாக வாய்ப்புண்டு,மதிய சோறும் திங்கமுடியாமல் ஒருவாறு உருண்டு புரண்டு கணினி முன் தவம் கிடந்து,அதுவும் இல்லையென்றால் சில சமயம் தடித்த புத்தககங்களை கையில் எடுத்துக் கொண்டோ இல்லை
தலையில் வைத்துக் கொண்டோ,பெரும்பாலும்"போரும் அமைதியும்" அதே பத்தாவது பக்கம், தூக்கம் சொக்கிக்கொண்டு வரும்.இந்த புத்தகத்தை முடித்துவிட்டால் வாழ்நாள் சாதனைதான். முகப்புத்தகத்தில் சிறிது நேரம்.

 மணி நான்கு,செல்பேசி சிணுங்கியது,நண்பர்தான்,திரையரங்கில் ஆறுமணி
 காட்சி,என்ன படம் என்பதெல்லாம் இல்லை,மொழிபேதம் கிடையாது ஹிந்தியானாலும் சரி இரண்டரை மணி நேரம் கடக்க வேண்டும் அவ்வளவுதான்.எழுந்து குளித்துவிட்டு உடைமாற்றி கிளம்பலானான். ஒப்பனை செய்வதெல்லாம் அலுத்துவிட்டது,செய்துதான் என்ன?மங்கை, மடந்தை,அரிவை ,தெரிவைகள்  காமுறும் வகையொன்றும் இல்லை.
சைக்கிளை வெளியில் எடுத்து மிதித்தான்.

விடுமுறை நாளென்பதால் அவ்வளவாக சாலையில் வாகன நெரிசல் இல்லை, சில பல கனரக வாகனங்கள்,ஆண்கள்,பெண்கள்,சில ஆப்ரிக்க இளைஞர்கள் கூடவே பெண்களும், இருக்கமாக அரைக்கால் ட்ரௌசரும், மேலாடை கீழிறக்கப்பட்டு ,குலுங்க,நன்றாகத்தான் இருக்கிறது,வட மாநிலத்தவர் எண்ணிக்கயும் அதிகமாகத்தான் இருக்கிறது,  பத்து வருடம் முன்பு கூட மாநிறத்தைதான் வெள்ளையென்று நினைத்து அலைந்த காலமெல்லாம் உண்டு, இப்போதும் ஒன்றும் ஆகிவிட வில்லை,முயற்சி செய்யலாம்,அனால் நம்க்கோ,
"கோன் ப்னேகா குரோர்பதி",

"எத்தன மணிக்கு லவுட்டேங்கா",

"தீன் பஜேங்கா,துமாரா பேரு என்ன?",

"மேரா பேரு உஸ்தாத் அலிகான்.."

அவ்வளவுதான்.ஆங்கிலமும் குளறுபடிதான்,

"என்னப்பா வயசு ஆகிட்டே போகுது,பொன்னு பாத்திடலாமா"

"ஏதொ உங்க இஷ்டம்,உங்களுக்கு பிடிச்சிருந்தா சரி"

பொதுவான இந்த பதிலின் அந்தரங்கமான அர்த்தம் இப்போதுதான் புரியத் தொடங்குகிறது.

"தாயளி லெஃப்ட் சிக்னல் போட்டு ரைட்ல போறான் பாரு".

ட்ராபிக் கான்ஸ்டபிள் ஒரு வட இந்திய இளைஞனை வட்டார வழக்கில் வசைமாறி பொழிந்து கொண்டிருந்தார்.

                                                   ********************

திரையரங்கில் கூட்டம் இருந்தது முதல் வாரம் போல,நண்பர் சொன்னவுடன்தான் தெரிய வந்தது,மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமென்று

"இந்த டைரக்டர் எடுத்த மூனு படமும் ஹிட்"

"அப்டியா.."

"ஹீரொயின் ஹிந்தில ஃபேமஸ்..ஆறுகோடி சம்பளமாம்.."

"ஓஹோ."

போஸ்டரில் ஹீரோயின் அழகாகத்தான் இருந்தாள்,வயசுப்பையன்கள் என்றில்லாமல் ஆண்கள் அனைவரும் காமறும் அதிரூப சுந்தரிதான், ஹீரொவுக்கு சற்று கிழடு தட்டியிருந்தது,அதை மறைக்க ரோஸ் நிற சுண்ணாம்பு,சிகரெட் குடித்து கருப்பேறிய உதட்டை மறைக்க சிகப்பு சாயம்,போஸ்டரில் கதாநாயகியை இறுக்கமாக  அணைத்து மார்பில் முகம் புதைத்து கொண்டிருந்தார்,நாயகி முகத்தில் உண்ர்ச்சி கொப்பளிக்க அவன் தலையை கைவைத்து அழுத்திக்கொண்டிருந்தாள்,

ஹம்ம்..கொடுத்துவைத்தவன்தான்,சும்மாவா ஆறுகோடியில்ல...

மேட்னி ஷோ முடிந்து,டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார்கள்..

கண்மூடி திறப்பதற்க்குள் மக்கள் கூட்டம் டிக்கெட் கவுன்டரை சூழ்ந்து கொண்டது,டிக்கெட் கொடுப்பவருக்கு நான்கு திசைகளிலும் கைகள் நீள அவரும் அலுக்காமல் கிழித்து கொண்டிருந்தார், அனைவருக்கும் டிக்கெட் உண்டு என்றாலும் விட்டுவிடுவார்களா..மக்களின் பாரம்பர்யம் என்னாவது, தமிழா தேசியமல்லவா..

"டிக்கெட் எவ்வளவுடா"

"கீழ நூறு..பால்கனி நூத்தியம்பது.."

சரி பார்க்கலாம் ஹீரோயினுக்காக,ஆறு கோடி சம்பளம், நூறு ரூபாய்க்கு மலிவா காட்டுறான்,பார்த்துவிட்டு போகலாம் ஒன்னும் குறையில்லை என்று
 தோன்றியது.

பெரும்பாலும் கல்லூரி இளைஞர்கள்,ஆண், பெண்,ஒரு ஆண் பல பெண்கள்,பல ஆண்கள் ஒரு பெண் என்ற விகித அடிப்படையில் அங்கங்கு சிரித்து பேசிக்கொண்டிருந்தார்கள்,

"மச்சி ஒரு வாரத்துல அம்பது கோடி வசூலாம்..போன படத்தை பீட் பண்ணும்னு  பேப்பர்ல படிச்சேன்.."

"ஹீரோயின் அடுத்த படமும் தமிழ்லதானாம்..சம்பளம் எட்டு கோடியாம்..வெப்சைட்ல பார்த்தேன்.."

தங்கள் பொதுஅறிவை எடுத்து விட்டுக்கொண்டிருந்தனர் சிலர்,வெட்கமாகத்தான் இருந்தது இந்த செய்தியை படிக்காமல் விட்டோமென்று.

நண்பர் டிக்கெட் வாங்கிக்கொண்டு வந்தார்.

உள்நுழையும்போதும் அதே அடிதடி..

எப்படியோ உள்ளே நுழைந்தாயிற்று..

தோதாக ஒரு இடம் தேடி அமர்ந்து சற்று மேல பட்டனை கழற்றி விட்டு ஆசுவாச படுத்திக்கொண்டான்.எதிர்புறம் சிலர் ஏற்கனவே படத்தை பார்த்திருப்பார்கள் போல,முன் கதையை சொல்லிக்கொண்டிருந்தார்.கதை என்று இல்லாவிடிலும் அந்த சின்ன சந்தோசம் கெட்டுவிடக் கூடாதென்று காதை பொத்திக்கொண்டான்.

நாயகனைவிட கதாநாயகியை பற்றித்தான் பேச்சு அதிகமாக இருந்தது.ஆவலாகத்தான் இருந்தது,என்னதான் இருக்குமென்று பார்த்துவிடலாம்,

விளக்குகள் அணைந்தது,ரீல் ஓடியது,பெயர் போட்டார்கள்,கதாநாயகனின் பெயர் ஒவ்வொரு எழுத்தாக கீழிருந்து மேல் சென்றது,பின்னே அதிரும் மின்னணு வாத்தியங்கள் முழங்க. அரங்கமே அதிர்ந்தது விசில் சப்தத்தால்.சில இளைஞர்கள் பூ தூவினார்கள்,இருக்கையின் மீதேறி சட்டையை அவிழ்த்துப் போட்டு ஆடினார்கள்.ஹீரோ அறிமுக பாடல் முடிந்தவுடன் ஹீரோயின் முறை,கதாநாயகி அருவியில் குளிப்பது போன்ற பாட்டு,முழுக்க நனைந்து ஈரம் அப்பிய தாவணியுடன் தரையில் புரண்டு குதித்து, அவிழ்த்து, ஆட்டி, விரித்து,முங்கி கிரங்க வைப்பதுதான்,பாட்டு முடிந்தவுடன்தான் சற்று சூடு தணிந்தது போல் இருந்தது.நண்பரை திரும்பி பார்த்துக்கொண்டான். நண்பருடன் அரங்கில் வந்து அமர்ந்தால் பின் பேச்சே இருக்காது,ஒரே ஏரில் பூட்ட வேண்டியவை.கலா ரசனை கொஞ்சம் குறைவு அவ்வளவுதான்.

காட்சிகள் நகர்ந்தன,நாயகன் வழக்கமாக பயம், வீரம், இழிப்பு, அற்புதம், 
இன்பம், அவலம், நகை, கோபம், நடுநிலை போன்ற நவரச உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்,அதற்க்கேற்ப கதாநாயகியும் மறற 
கதாப்பாத்திரங்களும் எதிர் உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.அவ்வபோது அலுக்கும்போது கதாநாயகி பருவ உடல் காட்டி நடனமாடி...

படத்தில் ஹீரே ஹீரோயினை ரேப் செய்வதுபோல் ஒரு காட்சி,துரத்திக்கொண்டு ஓடுகிறார் அத்துவானக் காட்டில்,தாவணி கிழிந்தாயிற்று, ஓடுகிறாள்,காட்சிகள் ஸ்லோ மோசனில் ஓட,ஹீரோயின் குலுங்கி ஓடுகிறாள்,தோதாக மழையும் பெய்கிறது,அட்ரா சக்கை. மாட்டிக்கொண்டாள், தரையில் புரளுகிறார்கள்,நாயகனின் கைகள் படர்கிறது, அணைக்கிறது, இறுக்குகிறது,அரங்கமே மயான அமைதியுடன் இருக்கையில் கேமரா வானை நோக்கி மேலெழுகிறது,எல்லாம் முடிந்தது,மூலையில் உட்க்கார்ந்து விசும்புகிறாள்.உதறிவிட்டு கிளம்பிய கதாநாயகனை கைப்பிடித்து இழுத்து..

போதுமா..இதுக்குத்தானா...

என்று ஆரம்பித்து இரண்டு பக்க வசனம் தமிழ் உச்சரிப்பு உதட்டசைவோடு ஒட்டாமல் பேசி முடித்தாள்.

கேட்டுக்கொண்டிருந்த கதாநாயகனை கேமரா நூறு சத்விகிதம் சூம் செய்கிறது,முகம் கோணலாக மாற,மூக்கு புடைக்க,கண்களிலிருந்து கண்ணீர் துளி விழுந்து நாயகியின் கைகளை நணைக்கிறது...இப்போது நாயகனிடமிருந்து வசனம்..

இவ்வளவு நாளா ஒரு மிருகமா வாழ்ந்துட்டேன்,தெரியல்,தப்புனு தெரியல என்று மறுபடியும் நான்கு பக்கம்.கதாநாயகன் திருந்திவிட்டதை உண்ர்த்தும் வகையில் நாயகி தாவணியில்லாமல் கிழிந்த ஜாக்கெட்டுடன் 
பாதிபகுதிகள் தெரியவே ,கதாநாயகனை மார்போடு அணைத்துக்கொள்கிறாள்.

வழக்கமாக வில்லன் நடிகர்தான் ரேப் செய்வதெல்லாம், இது புதிதுதான் ஒருவேளை ஆறு கோடி சம்பளம் காரணமாக இருக்கலாம்

இடைவேளை போட்டார்கள்..

பக்கத்தில் பேசிக்கொண்டார்கள்,

"ஹூரோ திருந்திட்டான்,இனிமே வில்லன பழிவாங்குவான்"

வேறென்ன,

டாய்லட் போகலாம்,அங்கும் கூட்டம் முந்திக்கொண்டது,சுவற்றில் தமிழனின் ஓவியத்திறமைகள்,மனித உடலின் அனாட்டமி,இலக்கியங்கள்,சில் இடங்களில் மொபைல் நம்பர்கள் எழுதி  நூறு ரூபாய் என்றிருந்தது, செய்தித்தாளில் காய்கறி விலைப் பட்டியல்  ஞாபகம் வந்தது.என்ன கட்டுப்படியாகும்.அரசு குறுக்கிட்டு இதற்க்கும் அடிப்படை விலை நிர்னயம் செய்ய வேண்டும்.

பாப்கான் வாங்கி கொறித்து கொண்டு வந்து மீதிப்படத்தை ரசிக்கலாம்,வெளியில் விற்பதைவிட இரண்டு மடங்கு விலை,இருந்தாலும் வியாபாரம் நடந்துக்கொண்டிருந்தது,நாம் ரௌத்திரம் பழகுவது காய்கறி சந்தையில்தான்.இரண்டு பெப்சி வாங்கி குடித்துவிட்டு இருக்கையில் வந்து அமர்ந்தாயிற்று.

மீதி படம் ஓடிக்கொண்டிருந்தது,கதாநாயகன் பறந்து பறந்து பௌதிக விதிகளுக்கு கட்டுப்படாமல் சண்டையிட்டு கொண்டிருந்தார்.வசனங்கள் தெறித்தன,வாசகர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட வசனங்களாம்,பரிசும் உண்டு,நாயகன் உக்கிரம் அடங்கும்போதெல்லாம் நாயகியை முகர்ந்து தணிகிறார்.நம்மையும் த்ணிய வைக்கிறார்.இறுதியில் வில்லன் நாயகியை ரேப் செய்வதுபோல் காட்சி,ஆனால் இந்தமுறை ஓடுவதோடு சரி, வில்லனுக்கு அந்த அனுகூலம் இல்லை.இறுதியில் வில்லனும் நாயகன்
பேசும் வசனத்தால் திருந்திவிடுகிறார்.

படத்தில் எல்லாரும் திருந்திவிடுகிறார்கள்,பார்ப்பவர்கள் தவிர,படம் முடிந்து செல்லும் போது பேசிக்கொண்டார்கள்,ஹீரோயினுக்காக பாக்கலாம்,சரியான் சீன்றா மச்சி.

அடுத்த நாள் காலை எழுந்தவுடன் முடிவெடுத்தாயிற்று இனி சினிமா பற்றிய பொது அறிவை வளர்த்துக்கொள்வதென.

செய்தித்தாளில் அசாம் கலவரம்,விலைவாசி உயர்வு,ஊழலுக்கெதிரான போராட்டம் ஆகியவற்றை பைப்பாஸ் செய்து சினிமா பக்கம், நேற்றைய படத்தை பற்றி போட்டிருந்தார்கள்,அதில் டைரக்டர் பேட்டி,

கீழே ஒரு துணுக்கு செய்தி,நடிகையின் கவர்ச்சி படத்துடன்

"நகைக்கடை திறப்பு விழாவில் மும்பை நடிகை இடுப்பை கிள்ளிய ரசிகருக்கு அடி,உதை"

போடு... சிரிக்கி பய புள்ள,ஆசைய பாரு,அவனவன் ஆறுகோடி குடுத்து கூட்டியாரானுவ,இவுருக்கு ஓசில கேக்குதா"







Wednesday, 25 July 2012

ஒரே ஒரு பல்சரும் சில நிகழ்வுகளும்


காலை வெயில் சுள்ளென்று அடிக்க வாய்ப்பில்லாத அறையாதலால் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் என்ணமில்லை ஒன்பது மணி வரை சனிக்கிழமை ,இனி எழுந்தாலும் காய்ந்த பூரிதான்.சாப்பிட்டு வந்து படுத்ததுமே அனந்த சயனம் பின் மதியம் சற்று புரண்டு படுப்பது, மதிய உணவை தவிர்த்துவிடலாம், என் கவலையெல்லாம் இரவு விடுதி சாப்பாட்டை நினைத்துதான்,அந்த சொக்கநாதனின் கருணைக் கரம் என்னை அரவணைத்தாலன்றி..

சொக்கா.... உன்ன ஒன்னும் கேக்கல,இந்த ரெண்டு நாள் மட்டும் நைட்டுக்கு  எப்டியாவது  ஒரு ப்ளேட் காளானுக்கு மட்டும் ஏற்பாடு பன்னிடு,வாரம் நடக்கும் வழக்கமான பிரார்த்தனைதான்.

மற்ற நாளாக இருந்தால் சுந்தரம் பல்சரில் எவனையாவது தள்ளிக்கொண்டு போய் மொய் வைக்கலாம்.மிண்ணியல் பிரிவில் பல்சர் வைத்திருக்கும் ஒரே ஆள்,மோட்டார் சுந்தரம்.சனி,ஞாயிறுகளில் பல்சர் விடுதி நண்பர்களுக்கு சிறந்த வாகனமாகவும் பயன்படும்,மூடு சரியிருந்தால் அவனேதான் செலவு,இல்லையென்றால்,

பல்சரை சுந்தர் ஓட்ட,பின்னால் நானும்,நடுவில் பயணியுமாக
"சிக்குனான்டா ஒரு அடிமை"
                                               
கொஞ்ச நாளாக முகம் வாட்டமாகத்தான் இருந்தது அவனுக்கும்,வேறென்ன டாவுதான்.பெண் ப்ளஸ் டூ,கொஞ்சம் ராயல்தான், இவனுக்கு எப்டியும் மசியாது, சிலசம்யம் பின்னால் என்னை அமர்த்திக்கொண்டு அவள் வீடு வரை செல்வதுண்டு,

"எப்ட்றா மச்சி,உன்னத்தான்டா பாக்குறா அவொ"

"ரொம்ப நாளாவே இப்டித்தான் மச்சி போயிட்டிருக்கு, சீக்கிரமே பேசனும்டா"

"ம்ம்க்கும் அந்த நெனப்பு வேற இருக்கா"

ஏத்திவிட்டு  பார்ப்பதே ஒரு அலாதி சுகம்தான், அடடா.. ஆஹா...

ஆனாலும் இவன் படுத்துகிற இம்சைக்கு அளவு கிடையாது,

"இன்னக்கி நானும் ரெட்டு,அவளும் ரெட்டு"

"அப்டியா... "

"காலைல பார்த்ததுமே வெட்க்கப்பட்டு கீழ குனிஞ்சிக்கிட்டாடா"

" கண்ணு கூசத்தான் செய்யும்"
------------------
"மச்சி இன்னிக்கி எம்மேல கோவமா இருக்கா போல,பார்க்கவே இல்லடா"

"ப்ளஸ் டூ ரிசல்ட் பெயில் ஆயிருப்பா,உனக்குத்தான் அரியர் பத்தோட பதினொன்னு"

"என்னோட நெனப்பிலே படிக்காம போயிட்டாளோ"

"கர்த்தரே"

இலக்கியத்திற்கும் குறைவில்லை,

"மழை விட்ட அந்திப்பொழுது, குளிர்காற்றுடன் சன்னமாக தூறல், பல்சரின் மழைத்துளி நனைத்த கண்ணாடி வழியே சிதறிய பெண் பிம்பம்,மெதுவாக துலங்க மின்னல் கீற்று வெட்டி சென்றதுபோல் மனதில் ஓர் அதிர்வு, அவதான்டா ஏன்டா காதுல ஏதோ சிவப்பா ஒழுகுது"

"ஒன்னுமில்ல நீ கன்டினியூ"

அவ்வபோது கவிதைகளும் உண்டு

"நீ காற்று நான் கீற்று,நீ மரம் நான் உரம்"

"அவ்வ்வ்வ்வ்வ்வ்,முட்டுச்சந்துடா,வழியில்லடா"

இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள காரணம் அவன் என் நண்பன் என்றாலும் கூடவே பல்சரின் பின் உட்க்கார்ந்து நான்கு கிலோமீட்டர் தொலைவு பயனித்து அடையும் அந்த காளான் மஞ்சூரிக்காகவும்தான்.

தினமும் மாலை  சுந்தருடன் பல்சரில் ஆரியபவன் செல்வதே ஒரு இனிய பிரயாணம்தான. எங்களுக்குள் இழையொடும் அந்த கால வெளியை கடந்த நட்பையும் ஓத்துக்கொள்ளத்தான் வேண்டும்.இன்று அந்த பெண்ணிடம் தன் விருப்பத்தை தெரிவிக்கப்போவதாக சொல்லியிருந்தான். எல்லாம் நல்லபடியாக முடிந்தால் ட்ரீட். இன்று தப்பித்து விடலாம்.மதுரை சொக்கநாதன் துணை..
------------------
இனியும் எழாமலிருந்தால் காய்ந்த பூரியும் சந்தேகம்தான்..
சொக்கா....முன்னயே சொல்லிட்டேன், எல்லாம் உன் பொறுப்பு..

மெஸ்சில்  பூரியை கிழங்குடன் பிசைந்து இறக்கிவிட்டு பாதியில் விட்டுப்போன தூக்கத்தை தொடர்ந்து மிண்டும் ஒரு மணிக்கு எழுந்து அன்று மதிய உணவான சாம்பாரையும் தயிரையும் பிணைந்து பீட்ரூட் சேர்த்து மல்லுக்கட்டிவிட்டு உண்டான அயர்வினால் மறுபடியும் விட்டுப்போன தூக்கத்தை தொடர்ந்து முடித்துவிட்டு,

ஒரு வேலை முடிஞ்சுது,இனி ராத்திரிதான்..இன்னிக்கி எவன் சிக்குறானோ...மாப்ள மூஞ்சி வேற கொஞ்ச நாளா பாக்க சகிக்கல, அந்த பொன்னுக்கிட்ட சொல்லப்போறானாம், இன்னிக்கி மெஸ் இட்லிதான். எனக்கில்ல... எனக்கில்ல... சொக்கா.. தருமி கணக்கா புலம்ப வச்சிட்டானுகளே...

"பக்தா"

"அட போய்யா"

"மாப்ள நீயா,வேற நெனப்புல இருந்தேன்டா,சரியா தூக்கமில்ல ராத்த்ரிக்கி"

"அப்டி ஒன்னும் தெரியலையே,மொகரை வீங்கியிருக்கு" 
--------------
வழக்கம்போல பல்சர் சிக்ரி ஆஞ்சனேயர் கோவில் முன் உள்ள குட்டிச்சுவர் அருகே நின்றது.

"வாடா மாப்ள இன்னிக்கி உள்ள போவலாம்" -சுந்தர்

"கோயில் உள்ளையா,டேய் அபச்சாரம், அபச்சாரம், என்ன பேசுற, வாய கழுவு மொதல்ல"

"இல்லடா இன்னிக்கி அந்த பொன்னுக்கிட்ட சொல்லனும்னு சொல்லேன்ல"

"ஐய்யோ முடிவே பண்ணிட்டியா" (எப்டியும் நெகட்டிவ் ரிசல்ட்தான், இட்லியும் சட்னியும்தானா,சொக்கா...)

"சொக்கா நல்லாருக்காடா,புதுசா பார்த்து வாங்குனதுடா"

"ம்ம்ம் என்னது.. நல்லாருக்குடா, கண்டிப்பா அவ உனக்குதான்டா, உனக்காகவே பொறந்தவ அவடா,பத்தரமா பாத்துக்க மச்சி அவள"

"டேய் எங்கிட்டேவா"

"நெசமாத்தான் மாப்ள,அவ ஒன்ன பார்க்கும்போதே அவ மைன்ட் வாய்ஸ நா கேட்ச் பண்ண முடியுதுடா"

"சரி சரி அடங்கு,பார்க்கலாம்"

கடவுளே என்னவெல்லாம் சொல்ல வேன்டியிருக்கு, நரகத்துல எனக்கு சீட் கன்ஃபர்ம்.சற்று நேரம் பேசிவிட்டு மணி ஆறுக்கெல்லாம் பல்சர் ஆர்ய பவனைத் தாண்டி செக்காலை ரோட்டில் மணிக்கு  எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்து முத்து மாரியம்மன் கோயிலுக்கு முன் நின்றது.

"வெயிட் பண்றா மாப்ள,கோயில் உள்ள் போயிருப்பா கொஞ்ச நேரத்துல வருவா"

"எப்புட்றா,ஏற்கனவே பேசிட்டியா,அப்டினா இன்னிக்கி ட்ரீட்தான்னு சொல்லு,ராயல் ஹோட்டல் போவலாம்டா"

"இர்றா,நீயே கெளப்பிவிடுவ போல, எல்லாம் டெய்லி மறைஞ்சிருந்து பாக்குறதுதான்,செருப்பு வெளிய கிடக்கு"

"ம்ம்க்கும் வெலங்கும்"
-------------------

சற்று நேரத்திற்க்கெல்லாம் சொன்னது போலவே,கூட தோழியுடன் வந்தாள்,

"மாப்ள வராடா"
  
"ம்ம்ம்  பாத்தேன் "

நண்பனின் காதலி என்றாலும் ஃபிகர்தானே, கொஞ்சம் ஆசுவாச படுத்திகொண்டேன், நெஞ்ச நிமித்தி,புருவத்த தூக்கி வாயை ஒரு மாதிரி கோணலா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மாதிரி செய்ய வேன்டியிருந்தது."என்னலாம் பண்ண வேன்டியிருக்கு"

அவள் இவனை கண்டு கொள்ளவே இல்லையென்றாலும் ஆருயிர் நண்பனை உற்ச்சாக படுத்தும்விதமாக வழக்கம்போலவே

"நம்ம கிட்டதான் பேச வராடா,தைரியமா பேசு,ஆல் திபெஸ்ட்,அவ உனக்குதான்" இது கொஞ்சம் ஓவர் டோஸ்தான்.

சம்பவங்கள்,நகர்ந்து கொண்டிருக்கவே,

திடீரென்று எங்கிருந்தோ புதர் மறைவிலிருந்து வெளிபடும் மிருகம் போல ஒருவன் தென்பட்டு அந்த பெண்ணிடம் சேர்ந்துகொண்டு நடக்க, தோழி விலக,

"இது புதுசால்ல இருக்க,எங்கிட்டிருந்துடா வர்றான்"

"........."

கையில் இருந்த ரோஜாவை அவன் அவளிடம் கொடுக்க,அதை வாங்கி தலையில் அவள் சொருக,உரக்க சிரித்து பேசி நடந்தார்கள் இருவரும்,பேசிய தொணி சுந்தருக்கு சாதகமாக இல்லைதான்.

"இத நீ சொல்லவே இல்லையே"

"கொஞ்ச நாளாத்தான் நானும் அவன இவ கூட பாக்குறேன்"
வெறித்து பார்த்துக்கொண்டிருக்கவே, இருவரும் எங்களை ஒரு கதாப்பாத்திரமாகவே எண்ணாமல் கடந்து சென்றார்கள்.

தெளிவான நீலவானில் கருமேகங்கள் சூழும்போது ஏற்படும் கருமை நிறம்போல முகம் மெல்ல இருண்டது சுந்தருக்கு,

"என்ன மாப்ள இது" 

"எனக்கும் கொஞ்ச நாளா சந்தேகந்தான்,இன்னிக்கி முடிவு தெரிஞ்சிக்கலாம்னுதான்,உனக்கு எதாவது என்னபத்தி உவமை தோணிருக்குமே "

"இல்லடா கொஞ்சம் பொறு,எதுக்கும் சொல்லிப்பாரேன்"

"எதுக்கு நீ கதை எழுதவா?"

தத்தளிப்புடனே நகர்ந்தன சில நொடிகள்.

"ப்ரென்டா இருப்பான்டா,நீ எதுக்கும் போய் சொல்லுடா"
சொல்லிக் கொண்டிருக்கும்போதே,அவள் மட்டும் திரும்பி வந்து,

"அங்கிள் கொஞ்சம் தள்ளுங்க,செருப்பு எடுக்கனும்"

கிழிஞ்சிது புதினா சட்னிதான்,சொக்கா..கவுத்திட்டியே
எங்களை கடந்துபோகும்போது அவள் சுந்தரை ஒரு மாதிரி சிரிப்புடன் ஜாடையாக பார்த்த பார்வை புரியத்தானில்லை.
மேலும் அவன் ரணகள படாமல் இருக்க அந்த இடத்தை விட்டு விலகி  நடத்தி கூட்டிக்கொண்டு சென்றேன்.
           
"மாப்ள... அங்கிள்னு சொல்லிட்டு பாக்குறா பார்த்தியா, படைச்சவனையே ஏமாத்திபுடுவாளுக பாத்துக்க"

"நீ ஒன்னும் சொல்லான்டாம் ,வா இன்னைக்கி ஒரு ஃபுல் அடிச்சாதான் தூக்கம் வரும்"

"என்னடா சொல்ற"

"மறக்கனும்.. வலிக்குது.. அழுதுறுவேன்." என்று கைப்புள்ளை கணக்காக புலம்பியவனை தோளோடு அணைத்துக் கொண்டேன்.

"எல்லாம் அந்த சொக்கன் திருவிளையாடல்"

"என்னது?"

இல்ல மச்சி ஒரு ஃபுல்ல சிக்கன் சைட் டிஷ் சேர்த்து ராவா எறக்கினா சரியாகிடும்னு சொன்னேன்"
------------------------
சற்று நேரத்திற்க்கெல்லாம், சரவண பவனில் இரண்டு ரவுண்ட் முடிந்து அந்த கலிவெறி மிக்க பெருஒலி கேட்டது,

"சர்வர்ர்ர் ஓரு லெக் பீஸ்,ரெண்டு மசால் தோசே பார்சல்ல்ல்"

Wednesday, 20 June 2012

காமம் காமம் என்ப

காற்று மிதமாக சில்லென்று வீசிக்கொண்டிருந்தது,முழுநிலவுக்கு இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்கள் இருக்கவேண்டும், நிலவு ஒருவாறு முழுமை பெற்றிருந்தது,அதன் பால் நிற ஒளிப்பிரவாகம் பூமியெங்கும் கவிந்து கொண்டிருந்தது,ரசிக்கலாம்தான்,ஆனால் இளமை பருவத்தின் நிறைவுப் பகுதியின் ஒரு முன்னிரவில் இரண்டாவது மாடியில்,காற்றில் அசைந்தாடும் தென்னைமடல்கள் வழியாக நிலவை பார்க்க ஏதோ இனம் புரியாத சூன்யம் மனதை தொற்றிக்கொள்வது போல் இருந்தது சண்முகத்துக்கு, ரசிக்கும் மணங்களுக்கு ஏற்ப தன்மையை மாற்றிக்கொள்ளும்போல இந்த அகன்ட வெளி.

இப்போதெல்லாம் இரவு நீண்டுகொண்டேதான் செல்கிறது.தொலைக்காட்சி சேனல் ஒன்றில் தமிழ்படம் ஓடிக்கொண்டிருந்தது, காதல் குறித்து இரண்டு நிமிட வசனம் கதாநாயகன் பேசி முடித்ததும் சொல்லி வைத்தது போல் பவர் கட், மணி ஏழு, வழக்கமான நேரம்தான், கொஞ்சம் இரண்டு நிமிடம் முன்னால் போயிருந்தால் அந்த நீண்ட வசனத்தை சகித்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருந்திருக்காது.உள்ளே இருக்க முடியவில்லை.

நிலவையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்,பார்க்கும்தோறும் மனதில் ஏக்கங்கள் பெருக்கெடுத்தபடியே இருந்தது,பள்ளி முடித்து ஏழு வருடங்கள் ஆகியிருக்கும் ஆனாலும் புறவயமாக எந்த மாற்றமும் நிகழ்ந்ததாக தெரியவில்லை,மனதளவில் நிறைய,ஒரு சமயம் மனதலவில் மாற்றம் பெற்றிருக்கவில்லையென்றால் புறத்தில் பெருத்த மாற்றம் நிகழ வாய்ப்பிருந்திருக்கும். ஆனாலும் நினைத்து பார்க்கும்போது அதே வெறுமைதான் மிஞ்சுகிறது.மனித இனத்துக்கே உரிய ஒன்று.தேடல், வெறுமை,பின் தேடல்,கடைசியில் சூன்யம்.நிறைவை காண்பது எங்கணம்.

பக்கத்து வீட்டு மாடியில் ஏதோ அரவம் கேட்க சிந்தனையிலிருந்து களைந்து சூழ்நிலைக்குள் புகுந்தான்.அவள்தான், முழு முகம் தெரியாவிட்டாலும், அங்கங்களின் வலைவுகளையும், முகத்தில் நிலவொளியின் பிரதிபலிப்பையும் வைத்து வர்ணித்துவிடலாம் ஒரு மாதம் ஆகியிருக்கும் பவர் கட் தொடங்கியதிலிருந்து மாடிக்கு வரவும் அந்த பெண்ணும் அதே சமயத்தில் வரவுமாக பின் இருட்டில் மாறிமாறிபார்த்து கொள்வதுமாக ஓடிக்கொண்டிருந்தது.

கல்லூரிக்கு முன் கடைசியாக பார்த்தபோது பல்லி போல் இருந்தாள்,நான்கு ஆண்டுகள் ஊரில் இல்லையென்றால பல மாற்றங்கள நிகழ்ந்துவிடுகிறது.
வருடம் முழுதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்தான் அதற்குமேல் என்ன செய்ய முடியும்,அந்த பெண்ணும் என்ன நினைக்கிறாள் என்று யூகிக்க முடியவிலலை,ஒருவேளை காதலா?பின் இது ஒரு அபத்தமான முட்டாள் தனமான யூகம் என்று நினைத்துக்கொண்டான், அந்த பெண்ணுக்கும் தன்னுடைய நிலைமைதான் போல,மாலை மயக்கம் என்பது இதுதானோ?

கல்லூரியில் விளையாட்டாக பேசிக்கொள்வோம்,"மாப்ள காதல்,காதல்னு சொல்றாங்களே,அது உண்மையா பொய்யா,அது இருக்கா, இல்லையா,அது வரறதுகு முன்னாடி,மல்லிகப்பூ வாசம்,கொலுசு சத்தம்லாம் கேக்குமா?"

"எல்லாம் பொய்டா மாப்ள,காதல்ன்றது தூக்கி போட்டு சமுண்டுற வரைக்கும்தான்டா மாப்ள".சொல்கிறவன் போதையில் இல்லை என்பதை நினைக்கின்றபோது சற்று ஏமாற்றமாகத்தான் இருக்கும்.

சில சமயங்களில் இந்த உலகமே காமத்தால்தான் இயங்குவதுபோல் தெரியும், இரண்டு கோல் தூரத்தில் ஒரு பெண் நின்றிருக்க,ஒன்றும் செய்ய முடியாமல் தான் மயங்கி நிற்க எத்தனை பேர் இக்கணம் புணர்ந்து கொண்டிருப்பார்களோ? பின்னே? சுவரேறி குதித்து அந்தப்பெண்ணை கபளீகரம் செய்யவா முடியும்?எண்ணங்களை அடக்க முயன்றான்.

சரி அது போகட்டும் முதன் முதலில் இந்த பாலுணர்வு எப்போது ஏற்பட்டது, எண்ணங்களை அடக்க முயன்று தோற்றுப்போய் பின் அந்த நினைவுகளிலேயே லயித்தான், எப்போதென்று சரியாக சொல்லத் தெரியவில்லை,பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது சக நண்பன் தன் அண்ணன் அவருடைய நண்பர்களோடு உரையாடிக்கொண்டிருந்ததை அப்படியே சொல்வான்,அவனுக்கு ஓரளவு புரிந்து விட்டிருக்கும் போல, கையசைத்து அவன் சொல்வதை கேட்க்கும்போதே முகம் சுளித்தாலும் மேலும் சொல் என்றே மனம் ஆசைப்படும், கழிவறையில் எவனாவது தனது சித்திரத்தை பாகம் குறிப்பிட்டு வரைந்திருப்பதை காண்கையில் உடலில் ஒரு கூச்சம்,சுவரொட்டிகளில், முகத்தில் விழுந்த சுருக்கத்தை மறைத்து ரோஸ்நிற  சுண்ணாம்பு பூசி, சிகப்பு சாயம் பூசிய உதட்டை சுழித்து காட்டி கிழட்டு கதாநாயகன் இளம் வயது நாயகியின் சதைப்பற்றுள்ள வயிற்றுப் பகுதியில் கைவைத்து கிள்ளி கண்ணங்களை முகர்ந்து கொண்டிருக்கும் படங்களை பார்த்துவிட்டு படுக்கையில் தூக்கம் கொள்ளாது, அதிகாலையில் குறிவிரைத்து நிற்பது ஆச்சர்யமாக தோன்றும். 

பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பெண்ணை பார்த்து என்ன என்று தெரியாவிட்டாலும் ஒருவித ஈர்ப்பு,தன் எதிரில் வரும்போதெல்லாம் அருகில் வரும் நண்பனிடம் உரக்க பேசுவது,வேண்டுமென்றே அந்தப் பெண் முன் ஓடிவந்து விழுவது,ஏதொ அந்த வயதில் தெரிந்த பெண்களை வசியம் செய்யும் வித்தை,இப்போது நினைத்தாலும் அபத்தமாக இருக்கிறது,பெண் ஆசிரியையாக இருந்தால் அவர் மற்றவன் எவனையும் புகழ்ந்து விடக்கூடாது,ஒரு வயிற்றெரிச்சல்,அதற்க்கென்றே தேர்வு சமயங்களில் தூங்காமல் படிப்பது,இதெல்லாம் கூட மனிதனின் பாலுணர்வு வெளிப்பாடுகள் தானோ?

நினைத்துப்பார்த்தால் இதையெல்லாம் அப்போதே கொஞ்சம் முதிர்ச்சியாக முயற்சி செய்திருக்கலாமென்று தோன்றும்,இயற்கை எந்த அறிவையும் புரிதலையும் அந்தந்த சம்பவங்களின் இறுதியில்தானே நமக்கு கற்றுக் கொடுக்கிறது,கிடைத்தப்பின் கடந்துவிட்ட வாழ்க்கை வெகுதூரத்தில் சென்றுவிடுகிறது, தேடியது அப்படியே கிடைத்துவிட்டால் மனிதன்
சிலையாக நின்றுவிடுவானோ? எல்லாம் நம்மை தொடர்ந்து இயங்கச் செய்வதற்க்காகத்தானோ  என்னவோ?

                                                *********
அப்போது ஐந்தாம் வகுப்பு,சொந்த ஊருக்கு கோடை விடுமுறைக்கு சென்றிருந்த சமயம்,

             செல்லியம்மன் கோயில்,விவரிக்கக்கூடிய அளவிற்கு பெரிய கோயில் ஒன்றும் இல்லை,அந்த ஊரில் இருக்கும் நூறு குடும்பங்களுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.கட்டிடக்கலை ஒன்றும் சொல்வதற்க்கிலை, விமானம் அடிப்பகுதியில் சதுரவடிவ கருவறை,பிரநாளம்,பிரஸ்தரம் போன்ற அமைப்புகளோடு மொத்த கோயிலே இருபது சதுரம்தான் இருக்கும்.

கோயில் பக்கத்தில் உள்ள கிணற்றுத்தண்ணீர் அந்த சுற்று வட்டாரத்தில் பிரசத்தி,குடித்தால் தேன்,கற்கண்டு தோற்றுப்போகும்.எல்லாம் அந்தந்த மண்ணின் மகிமை,அதற்க்கேற்ப அதில் தவழ்ந்து,நடந்து வளரும் உயிர்கள், சினிமாவில் வசனம் பேசுவதை கேட்டிருப்போம்,

"மதுர மண்ணுலே"

"வீரம் விளைஞ்ச மண்ணுடா இது,எங்க வந்து யாருகிட்ட"

கண்கள் சிவக்க,நரம்பு புடைக்க,வேட்டியை தொடைக்குமேல் வாரிக்கட்டி பேசுவான் கதாநாயகன்.

உண்மைதான் மண்தான் மனிதனின் குணாதிசியங்களையும் நிர்ணயிக்கும் போல,கரிசல் மண்ணில் வளரும் சில பயிர்கள் வண்டலில் வளராதது போல.

அப்போது வைகாசி தேரோட்டம்,முதல் நாள் காப்பு கட்டு முடிந்து கரகம் வீடுவீடாக சென்று படையலை வாங்கிக்கொண்டு,அடுத்தநாள் இரவு தேரோட்டத்திற்க்காக அம்மன் அலங்காரமாக தேரில் புதுப்புடவையுடன் ஜொலித்துக்கொண்டிருந்தாள். 

கரகம் சுற்றி வந்த அன்று இரவு கோயிலுக்கு பக்கத்தில் உள்ள பள்ளிக் கூடத்தில் வெள்ளை வேட்டியை விரித்து வைத்து திரைப்படம் காண்பிக்கப்படும்,சண்முகம் கோடை விருமுறைக்கு பாட்டிவீட்டிற்கு விரும்பி செல்வதற்க்கான பல காரணங்களில் இதுவும் ஒன்று.முதலில் கர்ணன்,திருவிளையாடல்,கந்தன் கருணை போன்ற படங்கள் பின் எதாவது திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் புதிய படம்.இரண்டரை மணி நேரம் காத்திருக்க வேண்டும் புதிய படத்திற்கு,எப்படியாவது தூக்கத்தை கட்டுப்படுத்திக்கொன்டு உட்காந்திருப்பான்,எப்போது தூங்கினோம் என்று தெரியாமல் காலை எழுந்திருக்கும்போது வீட்டில் படுத்துக்கொண்டிருப்பான். இம்முறை எப்படியாவது அனைத்து படங்களையும் பார்த்தே தீர வேண்டும் என்று தனக்குள் சபதம் ஏற்றுக்கொண்டான்.

தாத்தாவுக்கு எட்டுபிள்ளைகள், இது போன்று விடுமுறை நாட்களில் ஒன்று கூடுவிடுவார்கள்,அதுவும் கோயில் தேரோட்டம் சமயங்களில் தாத்தாவின் தங்கை,பாட்டியின் தம்பி தங்கைகள் என பிரிந்து கூடிய உறவுகளின் குசலங்கள்,அங்கங்கு மாமா,சித்தி,பெரியம்மா என ஆளுக்கு ஒரு அறையை எடுத்துக்கொண்டு அரட்டை அமர்க்களமாக இருக்கும்,

வீட்டில் பெரிய மாமா அறையில்தான் தொலைக்காட்சி,அநத அறைக்கு செல்லவே வாண்டுகள் பட்டாளம் பயப்படும் அதனால் பக்கத்து வீட்டில்தான் படம் பார்க்க செல்வது வழக்கம்,இரவு காமெடி சீரியல், ஞாயிற்றுக் கிழமைகளில் ஒன்பது மணி சீரியல்,நான்கு மணி படம்.அந்த வீட்டு பெண்ணுக்கு இருபது வயதிருக்கும்,வசந்தி,போனமுறை பார்த்தபோது சிறியவளாகத்தான் இருந்தாள்,புரியாமல்தான் இருந்தது .அந்த வீட்டின்முன் உள்ள வேப்பமரமும் போனமுறை பார்த்தபோது சிறு கன்றாகத்தான் இருந்தது,இப்போது கிளைகளை விட்டு பெரிய மரமாக வளர்ந்திருந்தது.

அழகாகத்தான் இருப்பாள்,சில சமயம் தொலைக்காட்சியில் படத்தை பார்க்காமல் அவளையே உற்று பார்த்துக்கொண்டிருப்பான், கவனித்து விட்டால் ஒரு மாதிரி அலட்சிய புன்னகை செய்வாள்,கோபமாக வரும் சண்முகத்துக்கு.எதாவது துடுக்காக பதில் சொன்னால் சிர்த்துக் கொண்டே கன்னத்தை கிள்ளிச் செல்வாள்.சில சமயம் டீவியில் நாடகம் பார்த்துக்கொண்டு அங்கேயே தூங்கியும் விடுவான்.

ஞாயிற்றுக்கிழமை,கோயிலில் திரைப்படம் காண்பிக்கப்படும் நாள், சண்முகம் கொண்ட பட்டாளம் ஆறு மணிக்கெல்லாம் கோயிலில் முற்றுகையிட்டிருந்தார்கள்,திரைப்படம் காண்பிக்கபடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே முன் வரிசையை ஆக்கிரமிப்பு செய்திருந்தார்கள். பார்ப்பதற்கு எட்டு முழ வேட்டி போல் இருந்தது,முன்னால் விரித்து கட்டியிருந்தார்கள்.

படம் ஆரம்பித்தது, முதலில் திருவிளையாடல்,சிவாஜிகனேசன் பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தார்,கிழடுகள் வாயை திறந்தவாக்கிலேயே பார்த்துக் கொண்டிருந்தார்கள், வயசுப்பையன்கள் கண்களை துழாவ விட்டபடியே பள்ளி தடுப்பு சுவரிலும்,சிலர் மரங்களிலும்,அமர்ந்துகொண்டு விசில் அடித்துக்கொண்டிருந்தனர்,ஒவ்வொரு வசனத்திற்க்கும் எதிர் வசன்ம் அவர்களிடையே பறந்து வந்தது,சில அத்துமீறவும் செய்தன,கண்ணிகள் அவற்றை கேட்க்காததுபோல கேட்டு கீழே குனிந்துகொண்டு சிரித்தனர், எதிர்பார்த்தது கிடைத்த உற்சாகத்தில் மேலும் பின்னிருந்து விசில்களும், கமென்டுகளும் பறந்தன.

இரண்டு மணிநேரம் சென்றிருக்கும்,தூக்கம் கண்ணை கட்டியது,இருப்புக் கொள்ளவில்லை, தூக்கத்திற்கு முன் சபதம் ஒன்றும் எடுபடவில்லை, தள்ளாட்டத்துடனே எழுந்து வீட்டிற்கு நடந்தான்,கும்மிரிட்டு வழி தட்டுப்படாவிட்டாலும் கால்கள் அனிச்சையாக சென்றன.வீட்டில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது,விடிய விடிய எரிந்துக்கொண்டிருக்கும்,வீடே கூச்சலில் இருந்தது, எங்காவது இடம் தேடி படுத்துக்கொண்டாலும் தூக்கம் பிடிப்பது சிரமம்தான்,மாடிக்கு சென்றான் அங்கு ஏற்கனவே மாமாக்கள் கூட்டம் அரட்டையில் இருந்தது.சிறிது நேரம் கழித்து வந்திருந்தால் தூங்கிவிட்டிருப்பார்கள்,எங்காவது இடம் பிடித்து படுத்துக் கொள்ளலாம். கீழே இறங்கி வீட்டை விட்டு வெளியே வந்தான்.நடந்த களைப்பில் தூக்கம் பறந்துவிட்டிருந்தது,திரும்ப கோயிலுக்கே போகலாம் என்று கூட தோன்றியது.

மணி ஒன்பது,வசந்தி வீடு திறந்துதான் இருந்தது,உள்ளே எட்டிப் பார்த்தான்,நான்கு அறைகள் கொண்ட வீடு அது,கதவு திறந்தவுடன் சிறிய கூடம்,அதை தொடர்ந்து சமையற்கட்டு,கூடத்தின் இடது பக்கத்தில் படுக்கையறை,மற்றுமொரு உபரி அறை,கூடத்தின் நேரே வலபக்க மூலையில் தொலைக்காட்சி,அவள் விழித்துக்கொண்டுதான் இருந்தாள்,

"என்ன இங்க? படம் பாக்கிலியா" -வசந்தி.

"சாமி படம் ஓடுது,எத்தினி வாட்டி பாக்கறது"

"வீட்ல தூக்கம் வரிலயா?"

"ஆமா"

"சாப்டாச்சா"

"அது அப்பவே ஆச்சு"

அவள் வீட்டிலும் யாரும் இல்லை,கோயிலுக்கு போயிருப்பார்கள் போல,

தூர்தர்ஷனில் நாடகம் ஓடிக்கொண்டிருந்தது,

உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தான்,தட்டில் பலாச்சுளை கொண்டு வந்து தந்தாள்,

"இந்தா எடுத்துக்கோ"

"வேணாம்"

"கூச்சப்படாத சாப்டு"

சுளையின் நுனியில் முன்பல்லால் கடித்து இழுத்து,கொட்டையை வெளியே பிதுக்கி எடுத்து பின் கடித்து அவள் சாப்பிட்டதை பார்த்து அதே மாதிரி சாப்பிட்டான்.

மா,பலா,வாழை என்று முக்கனியை பற்றி பள்ளியில் படித்தது ஞாபகம் வந்தது.

தூர்தர்ஷ்னில் நாடகம் முடிந்து எதிரொளி ஓடிக்கொண்டிருந்தது,விடுபட்ட தூக்கம் வரும்போல்தான் இருந்தது,விட்டால் தூங்கிவிடுவான்,

கதவை தாழிட்டு வந்து வசந்தியும் அருகில் உட்கார்ந்துகொண்டாள். கொஞ்சம் இடித்துக்கொண்டுதான் உட்க்கார்ந்தாள், உட்கார்ந்து அசையும்போது தாவணி கசங்குக்கிற ஓசையும்,வலையல்களின் களகளப்பும்,மல்லிகையின் மிக அருகாமை மனமும் ஏதொ செய்தது,ஒரு குறுகுறுப்பு,

வீட்டிலேயே தூங்கியிருக்கலாம்,தொலைக்காட்சியில் பார்க்குமாறு ஒன்றும் இல்லை, இருந்தாலும் ஓடிக்கொண்டிருந்தது,

"டீவிய அமத்திடவா,"  -வசந்தி

"ம்ம்ம்"

"தலையான எடுத்திட்டு வரேன் இரி,படுத்துக்கோ"

தலையணை எடுத்து வந்து ,தொலைக்காட்சியை அமத்திவிட்டு, சமையற்கட்டுக்கு போனாள்,

படுப்பதா வேண்டுமா என்று யோசித்துவிட்டு தலையணையை வைத்து கை,கால்களை குறுக்கி கொண்டு,சுவரோரம் திரும்பி ஒருவாறு படுத்துக்கொண்டான்,தலையை பூமியில் புதைத்துக்கொள்ளும் நெருப்புக்கோழிபோல உணர்ந்தான்.சில முறை இங்கு இரவு தூங்கியிருந்தாலும் இந்த ஒரு இரவு ஒரு மாறுதலாகத்தான் இருந்தது.

முன் விளக்கும்,வெளியே தேர் வருவதற்க்காக போடப்பட்ட டியூப் லைட்டுகளும் சன்னமாக உள்ளே வெளிச்சத்தை அனுப்பிக்கொண்டிருந்தன.

சிறிது நேரம் கழித்து

வசந்தியும் கதவுகளை தாழிட்டு வந்து பின்னால் ஒருக்களித்து படுத்துக்கொண்டாள், மல்லிகை மிக அருகில் மணந்தது,கூச்சத்தில் நெளிந்தான். இதை எதிர்பார்க்கத்தானில்லை,

இரண்டு நிமிடம் சென்றிருக்கும்,

இன்னும் நகர்ந்து படுத்து கையை அவன் மேல் போட்டுக்கொண்டாள்,

கூச்சத்தில் உடல் நெளிந்தது,உடம்பையே யாரோ கூசிவிடுவது போல் உணர்ந்தான்,உடலை வளைத்து மெதுவாக அவள் கைகளிலிருந்து விடுவித்துக்கொண்டான்.

ஒரு நிமிடம் நிசப்தமாக ஓடியது,பின் எழுந்து சமையற்கட்டுக்கு சென்றாள்,

படபடப்பு சற்று அடங்கியது,

தண்ணீர் டம்ளர் கிணுகிணுக்கும் சப்தம் கேட்டது,

என்ன நடந்துவிடும்? இந்த வயதில் யூகிக்க முடியாதுதான்,

பயமாக இருந்தாலும் அடுத்து சில நொடிகளில் நடக்கும் நிகழ்வுகளுக்காக ஒருவாரு மனதில் எதிர்பார்ப்பு,இதயத் துடிப்பு அம்மன் கோயில் மணிபோல் வேகமாக ஒலிப்பதாக உணர்ந்தான்.

கண்களை திறக்கவேயில்லை..

சிறிது நேரம் கழித்து மீண்டும்  வந்து அருகில் அணைத்தவாறு படுத்துக் கொண்டாள்,தாவணி நனைந்திருந்தது,மறுபடியும் கைகளை பிடித்துக் கொண்டாள்.அவளின் சூடான மூச்சுக்காற்று கன்னத்தில் பட்டு பரந்தது.

இப்போது கைகளை எடுக்க முடியவில்லை,விருப்பமில்லை,

பழகிவிட்டதோ?

கையை தடவி கொடுத்தவள், தன் விரல்களை அவன் விரலிடுக்குகளில் நுழைத்து இருகப் பற்றிக்கொண்டாள்,


பின் இருகப்பற்றிய கைகளை வலுவுடன் இழுத்து தொடையிடுக்கில் வைத்துக்கொண்டாள். 

இதுவரை பெற்ற புறவுலக அறிவு,இது என்ன என்று கூறமுயலாவிட்டாலும், நடப்பது ஏதொ விதிமீறல் என்று பிரக்ஞை மட்டும் இருந்தது.'ஓ'வென்று கூச்சலிடும் அளவிற்கு சூடும் வெறியும் உடலில் பரவியது கைகள் நடுங்கியது,காய்ச்சல் அடிப்பது போல் உணர்ந்தான்.

அந்த நிலையிலேயே சில நிமிடங்கள் சென்றிருக்கும்,

கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.

                                            **************

அந்த சம்பவம் மனதில் நீர்த்துப்போக வருடங்களாயிற்று,அந்த காரம் குறைந்தாலும் அதனால் ஏற்ப்பட்ட மாற்றம்,எத்தனை தாக்கத்தை ஏற்படுத்துவிட்டாள் என்னிடம்.அடுத்த நாளே மறுபடியும் அங்கு செல்ல வேண்டும்போல் இருந்தது,இரண்டு மூன்று முறை வெளியில் பார்த்தும் ஒன்று நடக்காதது போலல்லவா சிரித்தாள்.அந்த நாட்களில் அதை புரிந்துகொள்ளத்தான் முடியவில்லை.பல வருடங்கள் கழித்து பார்த்தும் அந்த சம்பம் நடந்தற்க்கான தடயம் அவளிடம் எதுவும் இல்லை.ஆச்சர்யமாக இருந்தது.

கதவு தட்டபட்டதும் ஏன் பயந்து அப்போது பின்வாசல் வழியே ஓடினோம், அவளைவிட பதிமூன்று வயது சிரியவன்தானே,ஆண் என்றுஉண்ர்ந்ததாலா?

திரும்பத் திரும்ப மனம் அந்த சம்பவத்தையே நாடியது,மனதில் போட்டு அழுத்தி,சதைத்து புதைத்தாலும்,மீண்டும் அறுக்க அறுக்க குருத்தது,மனம் அச்சம்பத்தை புதுக்க முயன்றது,

அன்று அவளுக்கு ஏற்பட்டது போல,

குரலுடைந்து,மீசை குருத்து,பருக்கள் தோன்றி வளரும் ஆசை

பெண்களை உறுத்துப்பார்க்கும் திருட்டு விழிகள்,

அண்ணல் நோக்க,பின் அவள் நோக்க ஏற்படும் பருவ வயது காதல்,

பேருந்துகளில் பெண்ணுடல்கள் உரசும்போது ஏறபடும் சில நொடி சுகத்துக்காக உருவெடுக்கும் அந்த கயவாளித்தனம்,

என்ன இது?

முயங்கினால் தீர்ந்துவிடுமா?

வருடங்கள் சென்றாலும் புரிந்தபாடில்லை,ஆனாலும் நம்மை மறைவாக இயக்கிக் கொண்டிருக்கிறது,தீராத பசி,

பல்போன கிழட்டு பசு மலைமேல் உள்ள பசுமையான புற்களை சப்பிப்பார்க்க நினைப்பது போல,

காமம் காமம் என்ப-

வெளிச்சம் பரவியது,

நினைவிலிருந்து விடுபட்டான்,

அந்த பெண் இன்னும் மாடியில் அங்குதான் நின்று கொண்டிருந்தாள்,

வானில் நிலவை மேகம் மறைத்துக்கொண்டு சென்றது,உணமையில் மறையாது,என்போல் எங்கோ ஒருவன் அதை இச்சமயம் ரசித்துக்கொண்டிருப்பான்,

சில்லென்ற காற்று முகத்தை வருடியது.சில நினைவுகள் அதன் தாக்கங்கள் இருக்க,கனவுபோல் கரைந்துவிடுவது அதிசயமாகத்தான் இருந்தது சண்முகத்துக்கு.







             


                   


Sunday, 6 May 2012

சொல்ல மறந்தவை..


"ஓட்டை பெரியார் ஓட கூடவே ஒடுகிறது செப்டம்பரின் ஓர் இரவு ",

ம்ம்ம் ஒட்டவில்லையே....கண்றாவி..

"பெரியார் முன் செல்ல எனக்காக பின் செல்கிறது நினைவுகளோடு மரங்களும் வீடுகளும்",

ஆஹா.. கவித..கவித..

" அட சொறி புடிச்ச மொன்ன நாயே",

 மொபைலில் ரிங்க்டோன் அலறியது,திடிக்கிட்டு விழித்தான் சண்முகம்.வலதுப்பக்கம் கல்லூரி இளைஞர்கள் மொபைலில் இருந்துதான் வருகிறது.இப்படியெல்லாமா ரிங்க்டோன் வைப்பார்கள்.

வருவதும் கலைவதுமாக இருந்தது தூக்கம்.

சென்னைக்கு செல்லும்போதெல்லாம் தன்னுடைய முதல் சென்னை அனுபவத்தை அசைபோட்டபடியே செல்வது வழக்கம்,சண்முகத்துக்கு.

             கல்லூரி முடித்துவிட்டு ஒன்றிரண்டு தேர்வுகள் சென்னைக்கும்,சென்னை ராசியில்லை என்று திருச்சிக்கும் சென்று இரண்டு தேர்வுகள் எழுதி ஒன்றும் கைகூடிவரவில்லை,மங்களகரமானதொரு ஞாயிறு நாளில் மூட்டை முடிச்சிகளை கட்டிக்கொண்டு சென்னை வந்து இறங்கியாகிவிட்டது.

           சென்னையில் சைதாப்பேட்டையில் நண்பர்கள் அறையில் தங்குவதாக முடிவு.இரண்டு பேர் சண்முகத்தின் வகையராக்கள் மற்ற இரண்டு பேர் மென்பொருள் கம்பெனி ஒன்றிலும் வேலை.முதல் மூன்று நாள் ஆர்வக்கோளாரின் காரணமாக பக்கத்து கடையில் எம்ப்ளாய்மென்ட் நியூஸ் வாங்கி வரிக்கு வரி விளம்பரங்களை படித்து பேனாவால் கோடு போட்டு,இன்டர்நெட்டில் தேடி,அன்று செல்ல போகும் நேர்காணல் பட்டியலை குறிப்பு எடுத்துக்கொண்டு,காலை எட்டு மணிக்கே அறையை விட்டு கிளம்பி பின் இரவு ஒன்பது மணிக்குதான் அறைக்கு திரும்ப வேண்டியது,

"புதுசில்ல அப்டித்தான் இருக்கும் ,போகப் போக சரியா ஆயிடும்" என்றான் நண்பன் ஒருவன்.

மூன்று மாதம் ஆகிறது சென்னை வந்து ஆரம்பத்தில் வேலைத் தேடி அலுத்து பின் கம்ப்யூட்டர் கோர்ஸ் ஒன்றில் சேர்ந்து படித்து கொண்டிருக்கிறான்.

"கான்ஃபிடன்ட் இல்லாத பாய்ஸ்" என்று நினைத்துக்கொண்டான் சண்முகம்.

      துறை சார்ந்த வேலை என்றால் அனுபவம், சிபாரிசு இருந்தால்தான் கிடைக்கும்போல மென்பொருள் கம்பெனியில் சேர விருப்பமில்லை.அந்த சூழ்நிலையே ஒவ்வாமையாக இருந்தது சண்முகத்துக்கு.போய்தான் பார்ப்போமே என்று ஒரு நேர்காணலுக்கும் நண்பன் ஒருவனோடு சென்று பார்த்தான். மொத்த கம்பெனியே நான்கு குளிரூட்டப்பட்ட அறைகள்தான்.பதினைந்து பேர் வந்திருந்தார்கள்,நேர்காணலுக்கு.எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றால் பின்பயிற்சி கொடுக்க இருபத்தைந்தாயிரம், ஆறு மாத காலம் பயிற்சி என்று ஆங்கிலத்தில் சரளமாக பேசிக்கொன்டிருந்தாள் ஒரு பெண்,அழகாகத்தான் இருந்தாள்,

"சரியான கட்டை " என்று பின்னால் முனுமுனுப்பு.

                ஒன்றிரண்டு ஆண்கள் தவிர முற்றிலும் பெண்கள்தான்,இறுக்கமாக டீ ஸ்ர்ட்,ஜீன்ஸ்,எத்தனை வளைவுகள் என்று எண்ணிவிடலாம் போல,உதட்டு சாயம்,இமைகளுக்கு கருப்பு மைகளோடு கடக்கும்போது ஆங்கிலத்தை நுனி நாக்கில் உதிர்த்து கொண்டே சென்றார்கள், வெளிநாட்டு வகை நாற்ற மருந்து குப்பென்று வீசியது, காமத்தையும் தெளித்து கொண்டு போவார்கள் போல ,இங்கு என்ன வேலை செய்யவா தோன்றும்?இதுவே இப்படியென்றால் அந்தகாலத்தில் மன்னர்களின் அந்தபுறம் எப்படி இருந்திருக்குமோ,

"இருபத்தைந்தாயிரம் கொடுக்கலாம்தான்".

 நான்கு நாட்கள் இப்படியாக நகர்ந்தது,"என்னத்த போயி " என்றிருந்தது.அதற்கு பின்னான நாட்கள் ஊர் சுற்றுவதிலும்,மீதி நேரம் மெரினா கடற்கரையிலும் கழிந்தது.

            கடல் சண்முகத்துக்கு எப்போதுமே பிடிக்கும்,அதன் பிரம்மான்டத்தை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்போல தோன்றும்,முதன்முதலில் பள்ளிச்சுற்றுலா செல்லும்போது பார்த்து பிரமித்துப்போய் நின்றான்,மற்றவர்கள் அலையொடு விளையாடிக் கொண்டிருக்க விலகி நின்றே ரசித்துக்கொண்டிருப்பான்.

    எட்டு வருடங்களுக்குப் பின் இரண்டாவது முறை கடலுக்கு சென்றபோது பிரிந்து கூடிய நண்பர்கள் போல் குதூகலத்தில் கடலில் இறங்கி நேரம் போவது தெரியாமல் விளையாடினான்.அன்று முதல் கடல் அவனுடன் உரையாடும் நண்பன் போலாகிவிட்டது. சிதம்பரத்திலிருந்து இருபது மைல்கள் இருக்கும் கடல்,நேரம் கிடைக்கும்போதெல்லாம் செல்லத் தவறியதில்லை.

      கல்லூரி முடிந்து கடைசியாக பார்த்தது,இப்போது மீண்டும் இங்கு.பார்த்துக்கொண்டே இருந்தான்.

"பாத்து சுனாமி வந்து தூக்கிடபோகுது வா போகலாம் " என்று நண்பன எழுப்பினான்.

பேன்டை தட்டிக்கொண்டு புறப்பட்டான்.அறையிலும் அவ்வபோது நண்பர்களிடம் அரட்டை அடித்துக்கொண்டு இரண்டு வாரங்கள் கழிந்தது.நம்பிக்கையின் பிடி சற்று தளர்வது போல் தெரிந்தது.

                   வெள்ளிக்கிழமை ,வெளியில் செல்லும் எண்ணமில்லை,நண்பர்களும் ஒண்பது மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டார்கள்.காலை சாப்பாடு ஏதுமில்லை.சென்னை வந்ததலிருந்து காலை சாப்பாடு எப்போதாவது கிளம்பும்போது பக்கத்து பஸ்டான்ட் டீ கடையில் வடை,பஜ்ஜி இரண்டு மட்டும்தான்.

      பத்துமணிவரை படுக்கையில் படுத்து விட்டத்தை பார்த்து வெறித்துகொண்டிருந்தான்,வெளியே கடைக்கு சென்று விகடன் வாங்கினான்,அரை மணி நேரம் புரட்டிவிட்டு தூக்கிஎறிந்தான்,முன்புபோல இப்போதெல்லாம் விகடன் படிக்க பிடிப்பதில்லை ஒன்றிரண்டு ஜோக்குகள்,துணுக்குகள் தவிர.தேவையில்லாத நடிகைகள் பேட்டி அவர்களின் அந்தரங்கம், அரசியில்வாதிகளின் குடும்ப விரிசல் இதெல்லாம்தான் இப்போது விகடனில், திரைவிமர்சனம் எரிச்சல் தருவது,எந்த படத்திற்குதான் இவர்கள் நூறு மார்க் போடுவார்களாம், அறிவுஜீவிகளாக தங்களை  நினைத்துக்கொள்வார்கள் போல.

  தனிமை என்னவோபோல் இருந்தது.தனிமை புதிதில்லை , இருந்தாலும் இந்த நகரத்தில் வாழ்க்கையின் இந்த மாதிரி நெருக்கடியான தருணத்தில் தனிமை என்பது கொடுமைதான்.அலமாரியில் சிகிரெட் பாக்கெட் இருந்தது,பிடிக்கும் பழக்கமில்லை,கற்றுக்கொள்ளலாம்,ஒன்றை எடுத்து பற்ற வைத்து,இழுத்தான்,ஒன்றும் மாற்றமில்லை,மறுபடியும் இழுத்தான்

"நல்லா புகைய உள்ள இழுத்து உள்ள கொஞ்ச நேரம் வையி அப்புறம் பாரு" கல்லூரியில் நண்பன் ஒருவன் சொன்ன நினைவு.

     நன்றாக இழுத்தான்,கண்களில் தண்ணீர் வர இருமியதுதான் மிச்சம்,அதற்குள் கை சுட்டுவிட்டது, அடுத்த சிகரெட் ஒன்றை பற்ற வைத்தான்,இழுத்தான்,இதுமாதிரி தனிமையாக இருக்கும் சமயங்களில் சண்முகத்துக்கு தத்துவம் பொங்கியெழும்,அவை பெரும்பாலும் தன் இருப்பை,செயலை ஞாயப்படுத்துவதற்க்காக எழுந்த சிந்தனை,இப்போதும் எழாமலில்லை.

 வேலை கிடைப்பது என்ன அவ்வளவு கடினமா இந்த தாராளமய உலகில்,இல்லைதான்,நினைத்தால் எதையாவது பிடித்து பிழைத்துக்கொள்ளலாம்,எதை பிடிப்பது,பதினைந்து வருடங்களுக்கு மேலாக புத்தகத்தையே நம்பி இருந்தாகிவிட்டது,படிக்காமல் இருந்தாலாவது வேறு தொழில் கற்றிருக்கலாம்.

          திருடலாம்,கொள்ளையடிக்கலாம்,பிறர் காலை பிடித்து பிழைக்கலாம்,ஏய்க்கலாம்,எதையும் விற்கலாம் ஆனால இதைத்தான் விரும்புகிறதா இந்த சமூகம்,இப்போது தமிழ்நாட்டில் பெரும் பணக்காரர்களில் முக்காலவாசி மேற்சொன்னவற்றை செய்து வந்தவர்கள்தானே.ஆனால் நமக்கு அப்படியா சிறு வயதிலிருந்தே அறம் ஊட்டப்படுகிறது,தார்மீக அறிவியலும்,தொழில்முறை நெறிமுறைகளும் போதிக்கப்படுகிறது,இன்னது தவறென்றும்,ஈனத்தனமானது என்றும் தெரியப்படுத்துகிறார்கள்.அதை மீறி செய்ய உள்ளம் கூசுகிறது.அப்படியே செய்தாலும் விட்டுவிடுமா சட்டம்.அவர்களுக்கு சட்டம் கிடையாது அவர்கள் இயற்றுவார்கள்,நாம் அதை பின்பற்ற வேண்டும் .வெற்றி பெற்றவர்கள் சேர்ந்து அவர்களுக்காக செய்வதுதான் சட்டமா? தெளிவாகாதுதான்.குழப்பமதான். தனியாக காட்டில் வாழ்வதென்றால் இதெல்லாம் தூக்கி தூர எறியாலாம்.

           திருடவும் முடியாது,கூலி வேலையும் செய்ய முடியாது,மெண்பொருள் கம்பெனி என்றால், சட்டையை இழுத்து பேன்டுக்குள் விட்டு,டை,ஷூ போட்டுக்கொண்டு கணினி முன் உட்க்கார்ந்து கொண்டு,அந்த சூழ்நிலையை நினைத்தாலே கிலியாக இருக்கிறது.இதெயெல்லாம் மனதில் போட்டுக்கொண்டு தனக்கு தகுந்த மாதிரியும்,வெளியில் மிடுக்குடனும்,தன்மானத்துடனும் வாழ வகை செய்யமாறு ஒரு வேலை கிடைக்க வேண்டும்.கொஞ்சம் கடினமதான்.

           சிகரெட் பாக்கெட் முழுவதும் காலியாகிவிட்டது,அறைமுழுவதும் புகையாக இருந்தது, மூச்சுத்திணரல் வரும்போல.எழுந்து வாசற்க்கதவை திறந்தான்,வயிறு கர் முர் என்று கத்திக்கொண்டிருந்தது.காலை பட்டினி காரணமாக இருக்கலாம்.பக்கத்து ஹோட்டலில் சிக்கன் பிரியாணி சுவையாக இருக்கும்,சாப்பிடலாம்.சட்டை பேன்ட் போட்டுக்கொண்டு அறையை பூட்டிவிட்டு ஹோட்டலுகு நடந்தான்.

                கொஞ்சம் பெரிய ஹோட்டல்தான்,கூட்டம் நிரம்பி வழிந்தது,பிரியாணி ஆர்டர் செய்து வெகுநேரம் கழித்து ப்ளேட்டில் பெரிய கோழித்துண்டில் சாதத்தை தூவி எடுத்து வந்தான் சர்வர்,சாதமும் பாதி வெந்ததும் வேகாததுமாய் இருந்தது,வயிறு நிரம்பவில்லை மூன்று டம்ளர் தண்ணீர் குடித்தான்,எண்பது ரூபாய் பில்,மேலும் ஆர்டர் செய்து சாப்பிடலாம்,இந்த நெருக்கடியில் ஒரு வேளைக்கு எண்பது ரூபாய் அதிகம்தான்,புல் மீல்ஸ் சாப்பிட்டிருந்தால் மிச்சம்.ஏதொ முடிவுக்கு வந்தவன் போல் இன்னொரு பிரியாணி அர்டர் செய்தான்,சாப்பிட்டு முடித்து வெளியில் வந்தான் மணி ஒன்று காட்டியது.நான்கு நாட்கள் சாப்பாட்டு செலவை ஒரே நாளில் செலவு செய்தாகிவிட்டது.

                வானம் ஒருமாதிரி மந்தமாக இருந்தது,அறைக்கு செல்லும் விருப்பமில்லை.ரயில் நிலையம் வரை நடக்கலாம்.சற்று கூட்டமாகவே இருந்தது,மக்கள் வேகமாக நடந்தார்கள்,என்ன அவசரமோ? ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்து நடந்தான்,நகர் பகுதிக்குள் நடந்தான்,குடியிருப்புகள் பெருகியிருந்தது,ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் இடைவெளியில்லாமல் கட்டியிருந்தார்கள், இந்த வீடுகள்,குடியிருப்புகள் கட்டும்போதே இந்த மனிதர்களையும் சேர்த்து கட்டியிருப்பார்களோ,ஒருவர் முகத்திலும் மனிதனுக்குறிய குனாதிசயங்களையே காணோம்.

        ஒரு மரத்தை கூட பார்க்கமுடியவில்லை, குரோட்டன்ஸ்,சில பெயர் தெரியாத அலங்கார செடிகள் தவிர.இலக்கின்றி நடந்தான்,கூடவே தன்னை பொருட்படுத்தாது கடந்து வேகமாக நடந்தார்கள் மனிதர்களும்.அவர்களுக்கென்ன நிலைமையோ தன்னைப்போன்று.

              மணி இரண்டுதான் ஆகியது.வந்த பாதையிலெயே சென்றால் சீக்கிரம் அறை வந்துவிடும் அதனால் வேறு சுற்றுப்பாதையில் நடந்தான்,மீண்டும் ரயில நிலையம் வந்து சற்று அமர்ந்தான்.என்ன இந்த தனிமை என்னை சோதித்து பார்க்கிறதா? எவ்வளவு தூரம் என்று பார்த்துவிடுவோம்.களைப்பாக இருந்தது,எழுந்து அறைக்கு நடந்தான்.சற்று கண் மூடலாம் நன்றாக தூக்கம் வரும்போல் தெரிந்தது.

                        சட்டை பேன்டை கழற்றிவிட்டு ,கைளி ஒன்றை கட்டிக்கொண்டு படுக்கையில் சாய்ந்தான், தொலைகாட்சியை போட்டு,சானலை மாற்றிக்கொண்டே இருந்தான், தமிழ் சானல் ஒன்றில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது,தலைப்பு "பெண்கள் அரைகுறை ஆடை அணிவதை பற்றி " கார சாரமாக நடந்து கொண்டிருந்தது.

"ஆடை அணிவது அவரவர் சொந்த விருப்பம்,அதில் அடுத்தவர்வர்கள் எப்படி தலையிடலாம்" என்று பெண்கள் தரப்பில்.

"சரிதான்,ஞாயம்தான்"

"பெண்கள் இதுமாதிரி ஆடைகள் அணிவதால்தான்,ஈவ்டீசிங்க் நடக்கிறது,டைட் ஷர்ட் போட்டுக்கொண்டு பீச்சில் ஓடுவது ஆண்களை தூண்டுகிறது" என்று ஆண்கள் தரப்பில் ஒருவன் பேச"

அதற்கு "அக்கா தங்கையாக இருந்தால என்ன செய்வீர்கள் என்று எதிர்தரப்பில் கேள்வி வருகிறது,சற்று நேரம் மௌனம்,பின் கைதட்டல்.

நல்ல கேள்விதான்,ஆனால் பெண்கள் தங்களை அக்கா தங்கையாக நினைக்க வேண்டுமென்றா அந்த மாதிரி ஆடை அணிகிறார்கள்,சினிமாவில் ஆடையை அவிழ்த்துப்போட்டு "கட்டிப்புடி கட்டிப்புடினு பாடுகிறவளை அக்கா தங்கையாகவா நினைக்க முடியும்.என்ன ஒரு அபத்தமான கேள்வி.

               சானலை மாற்றினான்,கில்மா பாட்டு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது,பார்த்து ரசித்தான்.தூக்கம் வரும்போல் இருந்தது,தொலைக்காட்சியை அணைத்துவிட்டு புத்தகம் ஒன்றை எடுத்து புரட்டினான்.
மல்லாக்க படுத்து புத்தகத்தால் முகத்தை மூடி சற்று கண்மூடினான்.

           இரண்டு நிமிடம் இருக்கும்,திடீரென்று மூச்சுவிட மறந்ததுபோல் திணறல் ஏற்பட்டு விழித்துக்கொண்டான், மூச்சுத்திணறல்தான் புத்தகத்தால முகத்தை மூடியதால் இருக்கலாம்.

             நெஞ்சு அடைப்பதுபோல் இருந்தது,முகம் வியர்த்தது,பதற்றம் அடைந்தவனாக எழுந்து உட்க்கார்ந்து மூச்சை நன்றாக இழுத்து விட்டான்,வெளியே வந்தான்,பிரியாணியின் வேலையாக இருக்குமோ,இதயத்தில் கை வைத்து பார்த்துக்கொண்டான்,சீராகத்தான் இருந்தது.கல்லூரியில் படித்துகொண்டிருக்கும்போது நண்பனின் பள்ளித்தோழன் ஒருவன்,இருபத்தி ஒன்று வயதுதான் இருக்கும்,மதியம் மட்டன் மூக்குப்பிடிக்க சாப்பிடுவிட்டு படுத்தவன்தான்,எழுந்திருக்கவே இல்லை,மாரடைப்பு என்று மருத்துவர்கள் சொன்னது ஏனோ நினைவுக்கு வந்தது.இந்த வயதிலா ஏற்படும்?

          போனவாரம் பக்கத்து வீட்டு பெரியவர் ஒருவர் இறந்துவிட்டார்,குளிக்க்கும்போது கால் வழுக்கி,மண்டை அடிப்பட்டு.அழுகை சப்தமே இல்லை, சடலத்தை எலக்ட்ரிக் சுடுகாட்டில் எரித்துவிட்டு மாலையில் சகஜ  நிலைக்கு திரும்பிவிட்டார்கள்.ஊர்பக்கமாக இருந்தால் இரண்டு நாள் உடலை வைத்திருப்பார்கள், ஒப்பாரி சத்தம் ஊரையே தூங்கவிடாது,எங்கிருந்தெல்லாம் வருவார்கள் வண்டிக்கட்டிகொண்டு.வாழும்போது எப்படி வாழ்ந்தாரோ,போகும்போது ராஜாவாகத்தான் போவார்.

"எப்படி வேண்டுமானாலும் மரணம் நிகழலாம்,ஆனால் இந்த நகரத்தில் மட்டும் வேண்டாமப்பா"

                             ஏன் இந்த வீண் பயம்,இதற்கு முன் இப்படி ஏற்ப்பட்டதில்லையே, அறைக்குள் வந்து கை கால்களை ஆட்டி லேசான உடற்பயிற்சி செய்து பார்த்தான், மூச்சு விடுவதில் சிரமமில்லை,உட்க்கார்ந்தான்,  ஒருவேளை மாரடைப்பாகவே இருந்தால்? ஏன் இந்த வயதில் இப்படி ஒரு எதிர்மறையான எண்ணங்கள்? என்ன நடந்தாலும் சரி என்று தேற்றிக்கொண்டு,எழுந்து கதவையும்,சன்னலயும் திறந்துவிட்டான், இப்படியே சாக விருப்பமில்லை , காலையில் உடலை எடுக்கும்போது துணி தொடைக்கு மேல் விலகி பனியன் மேலேறி தொப்பை பிதுங்கி போட்டா எடுத்து தொலைக்காட்சி சானலில் ஒளிபரப்புவார்கள் "பூட்டியிருந்த வீட்டில் வாலிபர் சடலம் , கொலையா? தற்கொலையா?". சிரிப்பு வந்தது சண்முகத்துக்கு,மணநிலை பாதித்துவிட்டதோ?

            எழுந்து சட்டை பேன்ட் அணிந்து,தலையை எண்ணெய் தடவி வாரிக்கொண்டு,பவுடர் போட்டுக்கொண்டு வந்து படுத்தான்.பிணம் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று சொல்வார்களா என்ன?உலக அழகியாகவே இருந்தாலும் இறந்த பின் பிணம்தானே.எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை,ஐந்து மணி சூரியன் முகத்தில் அடித்து எழுப்பிவிட்டது,கிள்ளி பார்த்துக்கொண்டான்,

"உயிரோடுதான் இருக்கிறோம்,சாகவில்லை,அஜீரணக்கோளாராக இருக்கலாம்".

வெளியே சென்று சுற்றும் முற்றும் பார்த்தான்.உண்மையில் மரணம்தான் நிகழவிருந்ததா?இல்லை..
       
என்ன இந்த மனம் நிலையாக இல்லையே,மூன்று வருடங்களுக்கு முன்பு சுற்றுலா வந்த போது பார்த்த சென்னை இது இல்லை,ஒரே மனிதனுக்கு ஒரே உலகம் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு விதமாக காட்சியளிப்பது என்ன விந்தை?காட்சிப்பிழையா ,"மண்ணாங்கட்டி" பணப்பிழை, கையில் வீட்டில் கொடுத்த பணமும்,கல்லூரியின் பாதுகாப்பிலும் நண்பர்களுடன் சென்ற சுற்றுலா அது.சுற்றுலா சென்றவனுக்கும்,அதே இடத்தில் பஜ்ஜி போட்டு பிழைப்பு நடத்துகிறவனுக்கும் வித்தியாசம் இல்லையா என்ன?

யதார்த்தம் மனிதனை என்றுமே பயமுறுத்திக் கொண்டுதான் இருக்கிறது.தான் நினைக்கும் உலகம்தான் நேரிலும் இருக்கிறது என்று திடமாக நம்புகிறான், அது பொய்யாகும்போது விலகி ஓடி தன் செயலை ஞாயப்படுத்த பொய்களை தத்துவமாக புனைகிறான். உண்மை நிர்வாணமாக காட்சியளிக்கும்போது ஏற்க மறுக்கிறான்.

போதும் தத்துவம்,சலிப்பாக இருந்தது.யதார்த்த உலகை கண்டு பயப்படுகிறவனாகவே இருக்கட்டும், என்னவாயிருந்தாலும் சரி,

ஒரு முடிவுக்கு வந்தவனாக,

கொடியில் தொங்கிய ஆடைகள்,அலங்கார பொருட்கள்,புத்தகங்கள் இதர பொருட்களையும் எடுத்து பையில் வைத்தான்.முகம் கழுவி ஒப்பனை செய்து நண்பர்கள் வரும்வரை காத்திருந்து,அவர்களிடம் அடுத்த வாரம வருகிறேன் என்று சொல்லிவிட்டு சைதாப்பேட்டை ரயில்நிலையம் நோக்கி நடந்தான்.

       சென்னைக்கு வரும்போது இருந்த பாரத்தை விட இப்போது சற்று அதிகமாக இருப்பதுபோல் தோன்றியது,உடல் மெலிந்துதான் இருந்தது,பின் துணிப்பையின் கணமா? இல்லை,வேறு ஏதோ.ரயிலேறி தாம்பரம் இறங்கி சிதம்பரம் பேருந்துக்காக காத்து நின்றான்.

பேருந்து வந்து நின்றது,ஏறிக்கொண்டான்.